December 25, 2008

நான் ஹீரோ- வறுவல்கள்-கிளம்பீட்டான்யா

நான் ஏற்கெனவே காலையில் எழுதியிருந்ததைப் போல இன்று நானே வறுவல்களின் நாயகன் ஆன சம்பவங்கள் பற்றி எழுதுகிறேன்..
என்னோடு கௌரவ வேடங்களில் பிரபல இந்திய நட்சத்திரங்கள்.. 

#############

மெமரி பவர் 

99ஆம் ஆண்டு.. நான் ஷக்திFM இல் தொழில் புரிந்துகொண்டிருந்தேன்.. ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இசை அமைப்பாளர் தேவாவின் முழுமையான குழுவும் வந்திருந்தது. இவர்களோடு பாடகி சுஜாதா,பாடகர் கிருஷ்ணராஜ்,பாடகர் திப்பு (அப்போது அவர் மின்னலே,விரும்புகிறேன் படங்களில் மட்டுமே பாடியிருந்தார்) ஆகியோரும் வந்திருந்தனர்.

தேவா,கிருஷ்ணராஜ்,சுஜாதா ஆகியோரை நான் கலையகத்தில் நேரடியாக பேட்டி கண்டுகொண்டிருந்தேன்..
ரொம்ப சுவாரஸ்யமாக பேட்டி போய்க் கொண்டிருந்தது..
தேவா ஒரு இயல்பான மனிதர்.. எந்தக் கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..

அவர் பல பாடல்களை காப்பி அடிப்பது பற்றிக் கேட்டபோது கூட சளைக்காமல் "எல்லாக் கடைகளிலுமே தோசை தான் போடுகிறார்கள்.. ஆனால் எல்லாக் கடைத் தோசையும் ஒரு மாதிரி இல்லையே" என்று ஒரு போடு போட்டார். 

அவருடைய பல பாடல்களையும்,திரைப்படங்களையும் ஞாபகப் படுத்திய நேரம்,என்னுடைய தேடலையும்,தமிழ் உச்சரிப்பையும் தேவா மட்டுமல்லாது, கூட இருந்த கிருஷ்ணராஜ்,சுஜாதா இருவருமே மெச்சிப் பாராட்டினர்.

உச்சி குளிர்ந்து போனாலும், தொடர்ந்து கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தேன்..

அந்த நேரத்தில் என் உயிர் நீ தானே திரைப்படத்தில் இடம் பெற்ற தேவாவின் இசையில் கிருஷ்ணராஜ்,சுஜாதா பாடிய "ஜனவரி நிலவே நலம் தானா?" என்ற பாடல் எனக்கு மிகவும் மனம் கவர்ந்த பாடலாக இருந்தது;நேயர்கள் மத்தியிலும் அந்தப் பாடல் ரொம்பவே பிரபல்யம்..
அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், பாடியோர் இருவர் என்று மூவருமே இருந்த காரணத்தால் பாட சொல்லி கேட்டேன்.. வரிகள் தெரியாதென்று சொல்ல, நானே எனக்கு மிகப் பிடித்த பாடலேன்ற காரணத்தால் ஞாபகித்து எல்லா வரிகளையும் எழுதிக் கொடுக்க, என்னைப் பாராட்டியபடியே நான் ரசிக்க,ரசிக்க பாடினார்கள்..

அந்த பாராட்டின் போதையிலே அதே போன்றதொரு பாடலைத் தேடிப் பிடித்து பாடச் சொல்லலாமென ஐடியா வந்தது.

அப்போது பிரபலமாகவிருந்த "எந்தனுயிரே..எந்தனுயிரே" என்ற உன்னருகே நானிருந்தால் திரைப்படப் பாடலை ஞாபகப் படுத்தி பாடச் சொன்னேன்.

"ஆகா.. உங்க மெமரி பவரே பவர்" என்று தேவாவும், க்ரிஷ்ணராசும் பாராட்டினார்கள். சுஜாதாவோ தனக்கு அந்தப் பாடல் வரிகள் ஞாபகம் இல்லை என்றார். மறுபடி ஐயா ஹெல்ப் பண்ணினார். 

பாடினார்கள்.. பேட்டியும் முடிந்தது..

ரொம்ப நட்போடு மறுபடி மாலையில் அடுத்த நாள் நிகழ்ச்சி ஒத்திகையில் சந்திக்கலாம் என்று விடை பெற்றுப் போனார்கள்..

அன்று பகல் அடுத்த நாள் இடம்பெறவிருந்த மாபெரும் மேடை நிகழ்ச்சிக்கான தொகுப்புக்காக தயார்படுத்திக் கொள்ள இசைத் தட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைக்குள் சென்றபோது, தற்செயலாக உன்னருகே நானிருந்தால் பட இசைத்தட்டு கண்ணில் பட்டது..

அதில் எந்தனுயிரே பாடல் பாடியவர்கள் என்று அச்சிடப்பட்டிருந்த பெயர்கள்.. கிருஷ்ணராஜ்,சித்ரா.. 

####################

கிளம்பீட்டான்யா...

2006ஆம் ஆண்டு சூரியன் FMஇல் நான்.  அப்போது நான் முகாமையாளர்.ஒரு மேடை நிகழ்ச்சிக்காக நகைச்சுவை நடிகர் (விஜயகாந்துக்கு மட்டும் இவர் வில்லன்) வடிவேலு வந்திருந்தார்..

இரவு நேரம் எங்கள் பிரபலமான மாலை நிகழ்ச்சியில் இவரை நான் பேட்டி காண்பதாக ஏற்பாடு..கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தார்.. வரும் போதே பேட்டி களை கட்டும் என்பது அவர் கண்களிலே தெரிந்தது.. 

கண்களைக் குருடாக்கும் பிரகாசமான செம்மஞ்சள் சட்டையுடன் (இதுமாதிரியான நிறத்தில் ஆடைகளை அண்ணன் ராமராஜனும்,வடிவேலுவும் மட்டுமே அணிவார்கள்) வந்தார் வடிவேலு..

அவரது வழமையான கலகலப்புடன் பேட்டி களை கட்டியது.. தொலைபேசியில் நேயர்களும் வந்து வடிவேலுவிடம் கேள்விகள் கேட்டார்கள். தனது பிரபலமான திரைப்பட வசனங்களை வடிவேலு தனக்கே உரிய பாணியில் பேசி,நடித்து கலக்கினார். 

எனது கேள்விகளை ரொம்ப அவதானித்து சுவாரஸ்யமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..ஒரு கொஞ்ச நேரத்தில் குரல் தழு தழுத்து, ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டவராக அவருக்கே உரிய மதுரைத் தமிழில் "உன் தமிழுக்கு நான் அடிமைய்யா..ரொம்ப அருமையா தமிழ் பேசுறே.. "அப்பிடி இப்பிடின்னு ஒரு பாராட்டு விழாவே நடத்தீட்டார்.

எனக்குப் பெரிய பெருமை தான்.. உற்சாகம் ரொம்பவே கூடிப் போச்சு..

வடிவேலுவின் சில வசனங்களை நானும் சொல்லிக் காட்டினேன்.. அவரும் ரசித்தார்..

சற்று நேரத்தில் தொலைபேசி வழியாக ஒரு பெண் நேயர்..

"வடிவேலு அண்ணனிடம் ஒரு கேள்வி" என்று கேட்டார்..

"என்னம்மா கேக்கப் போறே" - வடிவேலு.

"உங்க பிரபலமான வசனம் ஒன்று சொல்லுங்களேன்" அந்த நேயர்.

"என்ன வசனம்மா?" - வடிவேலு..

"கிளம்பீட்டான்  எண்டு சொல்லுவீங்களே ..அது " என்றார் அந்தப் பெண்..

அது என்ன வசனம் என்ற மாதிரி ,குழப்பமாய் என்னைப் பார்த்தார் வடிவேலு..அவருக்கு உதவி செய்யும் நோக்கில், கிட்டத் தட்ட அவரது ஸ்டைலில் "கிளம்பீட்டான்யா கிளம்பீடான்யா" என்று நான் சொன்னது தான் தாமதம்,தொலைபேசி அழைப்பிலிருந்த அந்தப் பெண்"நன்றி வடிவேலு அண்ணா.. அப்படியே படத்துல சொன்னது மாதிரியே இருந்துது" என்று அழைப்பை வைத்து விட்டார்..

வடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி.. 

நல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)


 

18 comments:

Anonymous said...

கிகிகிகிகிகிகிகி

சி தயாளன் said...

//வடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி..

நல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)//

ஹா..ஹா..

வடிவேலுவை சூரியன் 1999/2000 களில் ஒருக்கா கூட்டி வந்ததாக ஞாபகம்..

சின்னப் பையன் said...

:-)))))))))

தேவன் மாயம் said...

:-)))))))))))))
தேவா...

ஆளவந்தான் said...

//
"எல்லாக் கடைகளிலுமே தோசை தான் போடுகிறார்கள்.. ஆனால் எல்லாக் கடைத் தோசையும் ஒரு மாதிரி இல்லையே"//

தோசைக்கு பதிலாக.. காப்பி என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்

தமிழ் மதுரம் said...

வடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி..


நல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)//


ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில ஒரே மாதிரியான குரல் கொண்ட இருவர் நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருந்தார்கள்.... அப்பொழுது ஒருவர் திடீரென வெளியே போனதும் மற்றையவருடன் பேசிய பெண்மணி என்ன சொன்னா தெரியுமா??? தம்பி அப... உம்மட குரல் ரொம்ப அழகாய் இருக்கு,,, நீர் செய்யுற அறிவிப்பே புதுசா இருக்கென்றாவாம்,,, அதுக்கு அதனைக் கேட்ட காண்,,,, அறிவிப்பாளரும்ம்... ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு என்று சொன்னதும் வெளியே போய் இதைக் கேட்டு விட்டு உள்ளே வந்த அறிவிப்பாளர் முகம் எப்படி இருந்திருக்கும்...??????? கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கள்.... இவர்கள் யார் எனப் புரிந்ததா லோசன்??? அப..காண்????

Anonymous said...

"கிளம்பீட்டான்யா கிளம்பீடான்யா"

நன்றி வடிவேலு அண்ணா.. அப்படியே படத்துல சொன்னது மாதிரியே இருந்துது"

அண்ணா இன்னெருமுறை சொல்லுங்க....................
ஹி ஹி ஹி ஹி ஹி

பாலச்சந்திரன் said...

சூப்பர்

Anonymous said...

ஹிஹிஹி.............ஹிஹி

Anonymous said...

//பாருங்கள்.... இவர்கள் யார் எனப் புரிந்ததா லோசன்??? அப..காண்????//

..சுதன் ...டீபன்

அவர்கள் தானே? ஹிஹி :D

Anonymous said...

சூப்பர்

Anonymous said...

Very nice...

www.cityhits.blogspot.com

சந்தனமுல்லை said...

:-))))))))

IRSHATH said...

வறுத்தது போதும் அய்யா.. பாதியில நிக்கிற உங்க வரலாற்றை எழுதுங்க.. மனுஷன் எத்தன நாளைக்குத்தான் காக்கவைக்கிறது.. கொஞ்சமாவது மனசாட்சி நெஞ்கில் ஈரம் வேணும் :)

இந்த pop up ல comment போடறதுக்கு வேறயா training எடுக்கணும்,,

ப்ரியா பக்கங்கள் said...

நீங்க சொன்ன அந்த இசை நிகழ்ச்சிக்கு அடியேனும் பார்வையாளராக வந்து இருந்தேன்..

உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ ..

**அன்று இலங்கை பாக்கிஸ்தான் ஒரு நாள் சர்வதேச போட்டி , "களு", * "ஜெயசூரியா" ஆகியோரின் அதிரடி ஆட்டம் அன்று தான் அந்த 312 ஓட்ட இலக்கு ...

**கானா பாடும் சபேஷ் , இப்பிடியும் ஒரு பாட்டு பாடினாரா !!!
எனக்கு பிடிச்ச அந்த பாடல்,
நிலவே நிலவே ... நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ....
பாடல்/ படம் வெளிவர முன் அந்த மேடையில் தான் பாடி பெரிய கரகோஷம் பெற்றது கூட ஞாபகமா .. !!!

எனக்கு இன்றும் நினைவில்.. அந்த நாள்..

கடியா கேட்காதைங்கோ இப்படி Memory பவர் இருக்கா என்று..
(இது தொழில் ரகசியமப்பா..)

தமிழன்-கறுப்பி... said...

சூப்பர் அண்ணன் ...

தமிழன்-கறுப்பி... said...

நான் ஊருக்கு வந்தா ஒரு நாள் எண்டாலும் அறிவிப்பாளரா வேலை செய்ய ஒரு சந்தர்ப்பம் குடுப்பியளோ...:)

Gajen said...

என் அண்ணன் சூரியன் fm இரசிகர் இல்லை வெறியர் என்றே கூறலாம்.வடிவேலின் பேட்டி என்றதும் அவரும், வடிவேல் ரசிகரான என் தந்தையாரும் நானும் ஒன்றாய் இருந்து பேட்டியை கெட்ட ஞாபகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner