அன்றைய பொழுதின் எண்ணவோட்டங்கள் இவை!
நல்ல ஞாபகம் இது ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே எழுதியது!
மழைக் காலத்துக்கும் பொருந்துகிறது..
வரிகள் ஒவ்வொன்றும் இப்போதும் ஞாபகம்!
மழையை ரசிப்பவன் என்பதானால் ஒவ்வொரு மழை பார்க்கும் போதும் (ஒவ்வொரு இடத்தில் பார்க்கும்போதும்) ஒவ்வொரு எண்ணம் வரும்!
இந்த இணையப் பக்கத்தை எனக்கு அனுப்பிவைத்த நண்பர் சகவலைப்பதிவர் சயந்தனுக்கு நன்றிகள்!
உயிர்ப்பு சஞ்சிகையின் முகப்பு..
5 comments:
கவிதைகளில் வருகின்ற ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகின்றன. இன்னும் பல் கவிதைகளை மழையாய் பொழிய விடுங்களேன் லோசன் அண்ணா நனைவதற்கு நாம் தயார் உங்களை போலவே!!!!!!!!!
தலையை நனைத்து
கேசங்களை தழுவி
நெற்றிப்பரப்பை ஊடுருவி
மூக்கு விளிம்பில் நடந்து
நாசிமுனையை கடந்து
உதடுகளை முத்தமிட்டு
உடலின் பரப்புகளை
ஆரத்தழுவும் போது
அப்பப்பா அனுபவித்து
பாருங்கள்!!!!
மழையை உடலெங்கும்
ஆளவிட்டு பாருங்கள்
அப்போதுதான் புரியும்.
இந்த வரிகள் மழையில்லாமலே
நனைய வைத்தவை!!!
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>
வார்த்தைகளின் ஆழம் புரிகிறது.........
யாழ்ப்பாண மண் வாடை அப்படியே தெரிகிறது.........
என்றும் பழைய அந்த நட்கள்ளின் நினைவுகள் நேசோடு அகலாது இருக்கும்.........
கவிதைக்கு நன்றி........
அருமையான வரிகள்.............
Sinthu
Bangladesh.
இதென்ன.. சீலையை கிழித்து பாக்கிற மாதிரியொரு படம்.. ச்சீசீ
நன்றி கலை.. உண்மையிலேயே நானொரு மழை ரசிகன்.. (ஸ்ரேயாவின் மழை படமல்ல)
மழை பற்றி எழுத,சொல்ல எப்போதுமே பிடிக்கும்.. :)
உங்கள் மழையில்லாமலே நனைந்த வரிகள் பிடித்தன..
சுட்டி அருண்.. இணைத்துள்ளேன்..நல்ல முயற்சியில் இறங்க வாழ்த்துக்கள்..
சிந்து - நன்றி..அது யாழ்ப்பாண மண் வாடை மட்டுமல்ல.. இலங்கை மண் வாடை என்று சொல்லுங்கள்.. காரணம் நான் கொழும்பு மழையில் நனைந்தது தான் அதிகம்.
கொழுவியின் மகனாரே- எதையும் கிழித்து பார்த்தால் தான் உள்ளடக்கம் தெரியும்.. ;) இது வான் கிழித்து பூமி இறங்கும் கதிர் படம். உயிர்ப்பு வெளியிட்ட சோமிதரன்,சயந்தன் (;)) மற்றும் குழுவினர் தான் படத்தின் அர்த்தம் அனர்த்தத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்
Post a Comment