நாளாந்தம் பாடல்களோடையே பழகுபவன் எனபதனால் ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போது பலப்பல எண்ணங்கள் கேள்விகள் பிறக்கும்!
அவற்றுள் சிலவற்றை இன்று எழுப்பியிருக்கிறேன்.
இவையனைத்துமே சீரியசான கேள்விகள்!
சத்தியமாக விடைத் தேடி குழம்பிய கேள்விகள்!
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
இல்லாவிட்டால் மேலும் கேள்விகளைக் கேட்டுக் குழப்புங்கள்!
1.ரஹ்மானின் சில படங்களுக்கு உண்மையில் அவர் இசையமைக்கவில்லையாமே? (பாடல்கள்,பின்னணி இசை)
பிரவீன் மணி,செல்வகணேஷ் போன்றவர்களே ஜோடி,பரசுராம் இன்னும் சில முக்கியமற்ற படங்களுக்கு பின்னணி இசை,சில பாடல்களுக்கு இசை வழங்கியதாகச் சொல்லப்படுகிறதே....
இந்த செல்வகணேஷ் தான் அண்மையில் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்துக்காக அருமையாக(ஏ.ஆர்.ஆர் ஸ்டைலில் இசையமைத்து உள்ளார்)
2.மதுஸ்ரீ, உதித் நாராயணன் போன்றவர்கள் ரஹ்மானின் இசையில் பாடும் போது தெளிவாகத் தமிழை உச்சரித்துப் பாடுகின்ற போதும், மற்ற இசையமைப்பாளரின் இசையில் தமிழைக் கொல்வது ஏன்?
அப்படி இருந்தும் அண்மையில் சர்க்கரைக்கட்டி படப் பாடல் மருதாணியில்,வாலியின் வரிகளைக் கடித்துக் கொன்று விட்டார் மதுஸ்ரீ..
(இளையராஜாவோ,யுவனோ இவர்களுக்கு வாய்ப்பளிப்பதே இல்லை)

3.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் ஹரீஷ் ராகவேந்திராவுக்கு பாடும் வாய்ப்பை ஏன் இன்னமும் வழங்கவில்லை?
(எனது நண்பருமான ஹரீஷூக்கு நேற்று பிறந்தநாள்)
இவ்வளவுக்கும் ஹரீஷ் ஏனைய எல்லோரது இசையிலும் பாடிவிட்டார்.
4.பாடகர் உன்னிக்கிருஷ்ணன் ஓரங்கட்டப் பட்டாரா? ஒதுங்கினாரா?
(இப்போதெல்லாம் அடிக்கடி விஜய் டிவியில் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பார்க்கமுடிகிறது. இறுதியாக இவர் பாடியது வித்யாசாகரின் இசையில் 'தம்பி' என்று நினைக்கிறேன்)
5.முதல் திரைப்படத்தில் பிரமாதமாக இசையமைத்து திரைப்படமும் வெற்றி பெற்று பாடல்கள் பேசப்பட்டும் பல இசையமைப்பாளர்களின் ஒரு சில திரைப்படங்களோடு காணாமல் போனது ஏன்?
உதாரணம் - பரணி, பாலபாரதி, ஜோஷ்வா ஸ்ரீதர்,ஜேம்ஸ் வசந்தன்,சௌந்தர்யன்..... இப்படி வரிசை நீளும்.
இவர்கள் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் ஹிட்!
6.முன்பெல்லாம் எம் ஜி ஆர், சிவாஜிக்கு டி.எம்.எஸ்,ஜெமினிக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடினால் தான் பாடல்கள் எடுபடும்;ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலை இருந்தது.
பின்னரும் கமல் ரஜனி இருவருக்குமே அதிகமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் பாடவேண்டும் என்ற எழுதப்படாத நியதி இருந்தது.
இப்போது அப்படி இல்லை! அது ஏன்?
ஒவ்வொரு படத்திலும் உள்ள குறைந்தபட்சம் ஐந்து பாடல்களையும் ஐந்து பேர் பாடுகிறார்களே!
ரசிகர்களின் ரசனை தான் மாறி விட்டதா?

7.இளையராஜா வைரமுத்துவுடன் இணைந்து தந்த எண்பதுகளின் மிகப் பிரபலமான பாடல்களைப் போல அதே அளவு மிகப் பிரமாதமான பாடல்களைப் பிறகு தரவில்லையே –
அதுபோல் ரஹ்மான் + வைரமுத்து கூட்டணி தந்த ஹிட் பாடல்கள் போல்
ரஹ்மானினால் மற்றப் பாடலாசிரியர்களோடு இணைந்த போது தமிழில் தரமுடியவில்லை. (வாலியை விட)
ஏன்?
8.ஒரே பாடலில் ஒரே நடிகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடகர்கள் குரல் கொடுப்பது (பாடுவது) ஏன்?
ஹரிஸ் ஜெயராஜின் இசையில் தான் இது அதிகம்
இதன் மூலம் கேட்பவருக்கும் பார்ப்பவருக்கும் குழப்பம் வருவதை உணரமாட்டார்களா?
9.பாடல்களின் கோரஸில் இந்த லாலலா...,ஒகோகோ.....,ம்ம்ம்ம....,நாநநா....,ராரா...., என்ற பலவகை கோரஸ்களில் இதுதான் இந்த பாடலுக்கு என்று இசையமைப்பாளர் எப்படித் தெரிவு செய்கிறார்?
(இதில் ஹரிஸ் ஜெயராஜ் தனிரகம் -ஏதோ ஒரு புரியாத மொழியிலிருந்து கொண்டுவந்து பொருத்திவிடுவார்.)
இசையமைப்பாளர் தேவாவிடம் ஒரு பேட்டியில் இந்தக் கேள்வி கேட்டபோது சமாளித்து பூசி மெழுகிவிட்டார்.
பரத்வாஜோ அதுதான் creativity என்று சொல்லித் தப்பித்துவிட்டார்.
***************************************
பத்துக் கேள்வியாகத் தரலாம் என்று பார்த்தால்.. ஒன்பதிலே நின்று விட்டது.. நவக்கிரகம் கூட நல்லது தானே செய்யும்.. எனவே இருக்கட்டும்.. ;)
22 comments:
ரகுமானின் இசையில் இப்போது அதிகளவில் நரேஷ் ஐயர் தான் பாடுகிறார். சில வருடங்களுக்கு முன் கார்த்திக்...
அண்ணா உங்கள் எழுத்துக்கள் அபாரம் உங்கள் blogல் உள்ள வெற்றியை கொஞ்சம் சரி பார்க்கவும் ஏன் என்றால் phoneல் loginபண்ணி கேக்கலாம் நான் bangkokல் இருந்து தீனாகோபி
///ஜோஷ்வா ஸ்ரீதர்,///
ஹ்ம். நல்லா வருவார்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.
காதலில் பின்னி எடுத்திருந்தாரு.
ஏ.ஆருக்கு இவருக்கு லடாய், ஏ.ஆர் தான் இவரை ஓரம் கட்டச் சொல்றாருன்னு ஒரு புரளி எங்கையோ படிச்ச ஞாபகம். :(
ஜோடி படத்திற்கு பாடல்களுக்கான இசை மட்டுமே ரகுமான் வழங்கியிருக்கிறார் என கேள்வியுற்றிருக்கிறேன். அதுவும் காதலுக்கு மரியாதை இந்தியில் எடுத்த போது அப்படத்திற்கு வழங்கிய அதே மெட்டுக்களைத்தான் ஜோடிக்கும் பயன்படுத்தினாராம். அதுமட்டுமில்ல ஜோடியில் எழுதப் பட்ட பாடல்கள் கூட காதலுக்கு மரியாதையில் பாடல்கள் வந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றதாகத்தான் இருக்கும்.
ஜோடி பாடல்களின் மெட்டிலேயே ஊஞ்சல் எனும் தொகுப்பு ஒன்றும் வந்தது. அதை யார் செய்தார்களோ தெரியாது.
(இந்தப் பாட்டுகள் அன்றைய காலத்தின் கனவின் பாடல்கள் என்ற படியால.. நினைவில நிற்கின்றன :) :)
ஜோடி,பரசுராம் , ஆட்டோகிராப் ஆகிய படங்களில் பாடல்கள் ஒருவர், பிண்ணனி இசை வேறொருவர் என்று அவர்கள் தெளிவாகவே கூறியதாக ஞாபகம்
//7.இளையராஜா வைரமுத்துவுடன் இணைந்து தந்த எண்பதுகளின் மிகப் பிரபலமான பாடல்களைப் போல அதே அளவு மிகப் பிரமாதமான பாடல்களைப் பிறகு தரவில்லையே –
அதுபோல் ரஹ்மான் + வைரமுத்து கூட்டணி தந்த ஹிட் பாடல்கள் போல்
ரஹ்மானினால் மற்றப் பாடலாசிரியர்களோடு இணைந்த போது தமிழில் தரமுடியவில்லை. (வாலியை விட)
ஏன்?/
வைரமுத்து வாலியை தவிர பிறர் வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்ற க்சப்பான உண்மைதான்
தம்பி,
ஹர்ஷ ஹாசனுக்கு, இந்தா, இந்த முத்தத்தைக் கொடுத்துவிடு.
//(இளையராஜாவோ,யுவனோ இவர்களுக்கு வாய்ப்பளிப்பதே இல்லை) //
யாரடி நீ மோகினி படத்தில் உதித் நாராயணன் யுவன் இசையில் பாடினார் என்று நினைக்கிறேன் (எங்கேயோ பார்த்த மயக்கம்!).
மற்றுமொரு விடயம் a.r.ரஹ்மான் தமிழில் இசை அமைக்கும் பாடல்களை விட மற்ற மொழிகளில் அமைக்கும் இசை மிகவும் சிறந்ததும் உலகத் தரம் வாய்ந்ததும் என்பது என் கருத்து. உதாரணம் அண்மையில் வெளியாகிய ஹிந்தி பாடல்கள் (யுவ்வ்ராஜ், ghajini, Jaane Tu Ya Jaane Na ), ஹாலிவுட் படமாகிய Slumdog Millionaire. இதற்கு காரணம் தமிழ் ரசிகர்களின் ரசனைய அல்லது இயகுனர்களா என்பது எனக்குள் இருக்கும் கேள்வி.
எனினும் லோஷன் அண்ணா, நீங்கள் நன்றாக அலசியுள்ளீர்கள். நீங்கள் கேட்ட கேள்விகளில் பலவும் என் மனதில் நிலவும் கேள்விகள்தான்... உங்கள் பணி தொடர வேண்டும்.
Note: ரஹ்மான் பற்றிய எனது பார்வை.. http://vlogendra.blogspot.com/2008/12/r-musical-genius.html
உன்னிகிருஷ்ணன் ஓரம்கட்டப்பட்டாரா என்ற கேள்வி என் மனதினுள்ளும் எழுந்த கேள்விதான்.
அதற்கு தமிழனின் ரசிப்புத்தன்மை மாறிவிட்டதா?
இல்லை அவரின் ஒரே சாயல் பொருந்திய பாடல்களை தான் அவரால் பாட முடியும் என்பதால் அவரின் சந்தர்ப்பங்கள் குறைந்து விட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.
கோரஸ்களில் இப்போது யாருக்குமே புரியாமல் நாக்கு மூக்கா நாக்கு மூக்கா என்றும் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை வருகிறது.இதெல்லாம் ஏன் என்ற கேள்வி எனக்கும் தான்?
அதுமட்டுமில்ல ஜோடியில் எழுதப் பட்ட பாடல்கள் கூட காதலுக்கு மரியாதையில் பாடல்கள் வந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றதாகத்தான் இருக்கும்//
உண்மைதான். உதாரணமாக கா/ம யில் வரும் ஆனந்த குயிலின் பாட்டு என்ற சந்தர்ப்பத்துக்கேற்ற பாடலே ஜோடியில் வரும் வண்ண பூங்காவைபோல... பாடலும். சிப்பட இயக்குனர் ப்ரவீன் காந்த் , ரஹ்மானின் நண்பர் என்பதால் அவர் ஹிந்தியில் இசையமைத்த பாடல்களை பெற்று ஜோடி, ஸ்டார் படங்களில் பாவித்தார்.
அதுபோல, எந்த ஒரு இசையமைப்பாளரும் வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றிய போது கொடுத்த ஹிட்களை (வித்யாசாகர் , பரத்வாஜ்) பிறாருடன் இணைந்து கொடுக்கவில்லை.
ஓரிரு படங்களோடு நின்று விட்ட ஒரு இசை அமைப்பாளர் பெயர் ஞாபகம் வரவில்லை. படம்: ரசிகன் ஒரு ரசிகை. மிக அருமையான பாடல்கள். 86/87 ல் வெளி வந்த படம்.
/ஓரிரு படங்களோடு நின்று விட்ட ஒரு இசை அமைப்பாளர் //
எஸ்.பி.பி
வண்ணம் கொண்ட வெண்ணிலாவே, அகரம் இப்போது சிகரம் ஆச்சு ஆகிய பாடல்களை மறக்க முடியுமா
லோசன் இதுக்கு எல்லாம் நீங்களே விடை காண முடியாத போது ம்.....நாங்கள் மட்டும் என்னவாம்??? அது சரி சபேஷ், முரளி, எஸ்.ஏ.ராஜ்குமார், சிறீகாந் தேவா... முதலிய பலரை விட்டு விட்டீர்களே??? எனக்கொரு சந்தேகம்....ம்... கேட்கவா??? கேட்கவா?? அது சரி நம்ம நாட்டில மட்டும் ஏன் பாடல்களை ஒலிபரப்பும் போது இந்தப் பாடலையும் உங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்டுவது உங்கள்......என்று பாடல்களுக்கு நடுவே ஒலிக்கும் போது அதுவும் கோரஸ் மாதிரி தான் எங்களால கேட்கப்படுது. அப்படி பாடப்படுவதற்கும் ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா??? பதில் தருவீங்களா???
உங்களை போலவே எனக்கும் நிறைய கேள்விகள்,
அண்மையில் ஒரு நண்பனுடன் கதைத்தபோது ஜோஷ்வா ஸ்ரீதரை ரஹ்மானே திட்டமிட்டு பழிவாங்கியதாக ஒரு கதை இருப்பதாக கூறினார் அது உண்மையா?
ரஹ்மான் தமிழ் படங்களுக்கு இசையமைக்க ஆர்வம் காட்டுவது குறைவாமே உண்மையா? அல்லது இவர் கூறும் சம்பளத்தை வழங்க முடியாமல் தயாரிப்பபளர்கள் பின்வாங்குகிறார்களா??
ரஹ்மானை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்கள் குண்டார்களால் மிரட்டப்படுகிறார்களாமே அது உண்மையா??
எல்லாத்தையும் விட வாரணம்
ஹரிசை பற்றி இன்னும் ஒரு சந்தேகம் ! திரைப்படம் ஒன்றிற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததும் வெளிநாடுகளுக்கு
(பாடல்களை கொப்பி அடிப்பதற்கு??!!) சுற்றுலா சென்றுவிடுவரமே இது உண்மையா??
ஆயிரம் படத்தில் வரும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடல்(ஹரிஹரன் பாடியது) உண்மையாகவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடலா?
பிரகஸ்குமார் மீதும் ஒரு சந்தேகம் இருக்கிறது
//மெல்போர்ன் கமல் said...
எனக்கொரு சந்தேகம்....ம்... கேட்கவா??? கேட்கவா?? அது சரி நம்ம நாட்டில மட்டும் ஏன் பாடல்களை ஒலிபரப்பும் போது இந்தப் பாடலையும் உங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்டுவது உங்கள்......என்று பாடல்களுக்கு நடுவே ஒலிக்கும் போது அதுவும் கோரஸ் மாதிரி தான் எங்களால கேட்கப்படுது. அப்படி பாடப்படுவதற்கும் ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா??? பதில் தருவீங்களா??
மெல்போர்ன் கமல் சொல்வதை நானும் வழிமொழிகின்றேன். யாரோ ஒரு இசையமைப்பாளர் இசையமைத்து யாரோ ஒரு பாடகர்கள் பாடியதை விலைக்கு வாங்கியோ அல்லது இணையத்திலிருந்து தரவிறக்கியோ ஒலிபரப்பும் நம்ம ரேடியோக்கள் ஏதோ தாங்கள் தான் இசையமைத்துப் பாடியதுபோல் அடிப்பார்கள் இந்தக்கொடுமை இந்தியாவிலிருந்து ஒலிபரப்பாகும் ரேடியோக்கள் கூடச் செய்வதில்லை.
இதை எல்லாம் விடக்கொடுமை பாடலின் இடையில் தங்கள் ரேடியோவின் பெய்ரை கர்ணகடூரமாக ஒரு ரேடியோவில் உச்சரிப்பார்கள். இப்படியான அறிவுக்கொழுந்துகளால் தான் நான் ரேடியோ கேட்பதையே குறைத்துவிட்டேன். காட்டுக்கத்தலை உருவாக்கியவர்களில் சிலர் இன்றைக்கு ஒலிபரப்புத்துறையில் இல்லையென்பது கே எஸ் பாலச்சந்திரன்,அப்துலஹமீத்,ராஜேஸ்வரி சண்முகம் போன்ற ஜாம்பவான்களை உருவாக்கிய இலங்கை ஒலிபரப்புத் துறைக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.
அமீரினால் சரோஜா இசை வெளியீட்டு விழாவில் ஏ ஆர் மீது கேட்கப்பட்ட" அமீர் மாதிரியான உணர்ச்சிகரமான இயக்குனர்களுடன் பணியாட்ட இணங்குவதில்லை" என்றதுக்கு விடை எதாவது இருக்கிறதா ஏ ஆர் ரசிகர்களே?
வந்தியத்தேவனின் கொழும்பு ரேடியோக்களின் குறைகள் கூட பொறுத்துக்கொள்ளக்
கூடியவை, டொரோண்டோ ரேடியோக்களின் சேட்டைகள், அப்பப்பா ஒவ்வொரு பாடலின் பின்னும் வரும் சில விளம்பரங்கள் நாராசமானவை அதுவும் கத்தேரிக்கா... விளம்பரம் ரேடியோக்களின்மீது வெறுப்பை வரவைத்துவிடும், அநேகமான விளம்பரங்கள் தமிழர்களுக்கு கத்தரிக்காய், மரவள்ளிகிழங்கு, கருவாடு, மீன் மற்றும் கடன் மீது காதல் வந்துய்ய உருவாக்கப்பட்டவை.
டொன் லீ, ரஹ்மானின் ஆஸ்தான பாடகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.. கூடுமானவரை தன் கட்டுப்பாட்டில் அந்தப் பாடகர்களை அவர் வைத்துக்கொள்ள முயல்வாராம்.
இப்போது அவரின் ஆஸ்தான பாடகர் நீங்கள் சொன்ன நரேஷ் ஐயரும்,பென்னி தயாலும்.பாடகிகள் சின்மயீ மற்றும் மதுஸ்ரீ
நன்றி தீனா கோபி, சரி பார்க்கிறேன்.. அலுவலகக் கணினியில் கேட்கவும் முடியாது,பார்க்கவும் முடியாது (video,mpeg) ..வீட்டில் பெரிதாக நேரமில்லை.. இந்த வார இறுதிக்குள் சரி பார்க்கிறேன்.
சர்வேசன், நானும் அப்படித்தான் நினைத்தேன்.. அடுத்த படங்களிலும் செய்தார்.. இப்போ சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் keyboard வாசிக்கிறார் என்று தெரியவந்தது.
நானும் இந்த செய்தி அறிந்தேன்..உண்மையா சொல்லுங்கப்பா யாரவது..
சயந்தன், ஆமாம்.. ஊஞ்சல் பாடல்களும் அந்தக் காலத்தில் ஜோடி பாடல்கள் போலவே பிரபல்யம்..பாடல்கள் திரையில் பொருந்தாதலேயே ஜோடி படம் தோல்வி அடைந்ததாக நினைக்கிறேன்.
புருனோ,ஆமாம் ஆனால் பாடல்கள் கூட நோட்ஸ் மட்டும் தான் ரஹ்மான் மற்ற எல்லாம் வேறு யாரோ என்று எனது பின்னணிப் பாடக நண்பர்களே எனக்கு வாக்குமூலம் தந்தனர்.;)
உண்மை தான்.. மாற்ற இளம் கவிஞர்கள் நன்றாகவே எழுதினாலும்,ரஹ்மானின் மெட்டுகளோடு செட் ஆவது என்னமோ வைரமுத்துவின் பாடல்கள் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நன்றி கிழன்செழியன் .. குடுத்திட்டேன்.. :)
ஜூட், ஆமாம்.. உதித் நாராயணன் யாரடி நீ மோகினிக்கு முன்னமே யுவனின் இசையில் வின்னர் படப் பாடலைப் பாடிக் கொன்றுள்ளார்.. ')
//மற்றுமொரு விடயம் a.r.ரஹ்மான் தமிழில் இசை அமைக்கும் பாடல்களை விட மற்ற மொழிகளில் அமைக்கும் இசை மிகவும் சிறந்ததும் உலகத் தரம் வாய்ந்ததும் என்பது என் கருத்து. உதாரணம் அண்மையில் வெளியாகிய ஹிந்தி பாடல்கள் (யுவ்வ்ராஜ், ghajini, Jaane Tu Ya Jaane Na ), ஹாலிவுட் படமாகிய Slumdog Millionaire. இதற்கு காரணம் தமிழ் ரசிகர்களின் ரசனைய அல்லது இயகுனர்களா என்பது எனக்குள் இருக்கும் கேள்வி.//
நீங்கள் சொன்ன இந்த விஷயத்திலும் உடன்படுகிறேன்.. அந்த ஆதங்கம் எனக்கும் உண்டு.தமிழில் இருந்து ரஹ்மான் விலகிச் செல்வதாகவே தோன்றுகிறது.
உங்கள் பதிவும் வாசித்தேன். நல்லதொரு கோணம்.. நாளை என் பின்னூட்டம் பாருங்கள்..
கரவைக்குரல், இருக்கலாம்;ஆனால் அதே பாணி,அதே சாயலில் பாடும் ஹரிஷ் ராகவேந்த்ராவின் பாடல்கள் இப்போதும் ஹிட் ஆகின்றனவே..
அந்த நாக்க முக்காவும் ஹிட்.. நம்மவரின் ரசனை பற்றிப் புரியுதே இல்லையே..
அருண்மொழிவர்மன், நீங்கள் சொன்ன கருத்துக்கள் முற்றிலும் சரியே..
நானொரு வைரமுத்து ரசிகன் என்றாலும் பொதுப்படையான பார்வையிலும் அனேகரது கருத்துக்கள் அப்படியே அமைகின்றன..
பாடல்கள் எழுதுவதென்பது பாடல் வரிகளும், மெட்டுக்களும் திருமணம் செய்வது போல.. Living together அல்ல.. ;)
பி.கு:- என்னுயிர்த்தோழன் பற்றிய உங்கள் பதிவு பார்த்தேன்.. அருமை.
ஆமாம் செயபால்,அவர் பெயர் ரவீந்தரன்..இப்படியானவர்கள் பற்றிய முழுமையான பார்வை ஒன்றை அண்மையில் நண்பர் ஒருவரின் வலைப்பதிவில் படித்த ஞாபகம். ஞாபகம் வந்தால் அந்த வலைப்பதிவும் முகவரி தருகிறேன்.
புருனோ , SPB ஒன்றிரண்டு அல்ல.. முப்பதுக்கும் மேற்பட்ட (தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னட) படங்களுக்கு இசை வழங்கியுள்ளார். சிகரம் தான் எல்லாவற்றிலும் சிகரம்.. :)
மெல்போர்ன் கமல்,என்னால் விடைகள் காணமுடியாமல் தானே உங்களிடம் கொண்டுவந்தேன்..:)
எனக்குக் குழப்பம் வருகின்றபோதெல்லாம் எல்லோரையும் குழப்பவேண்டும் என்பது எனக்கு மிக விருப்பமான விடயம்.;)
நீங்கள் குறிப்பிட்ட நான்கு பேருமே இப்போதும் இசையமைப்பவர்கள்.. நிறைய வெற்றிபெற்ற திரைப்படங்களுக்கு இசை வழங்கியுல்லார்களே..
//அது சரி நம்ம நாட்டில மட்டும் ஏன் பாடல்களை ஒலிபரப்பும் போது இந்தப் பாடலையும் உங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்டுவது உங்கள்......என்று பாடல்களுக்கு நடுவே ஒலிக்கும் போது அதுவும் கோரஸ் மாதிரி தான் எங்களால கேட்கப்படுது. அப்படி பாடப்படுவதற்கும் ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா??? பதில் தருவீங்களா???//
முன்பொரு காலத்தில் நானும் அந்தக் கோரஸ் பாடியவன் தான்..அதுவொரு போட்டி விளம்பர யுக்தி.
அதையும் ரசிக்கும் நேயர் கூட்டம் இன்னும் உண்டு ஐயா..
இன்னுமொன்று, இப்போது எங்கள் வலைப்பதிவுகளை மற்றவரை ஈர்க்கும் நோக்கில் நாங்கள் எப்படிப் பிரபல்யப்படுத்த முனைகிறோமோ அப்படித்தான் வானொலியிலும் எல்லா(!) விதத்திலும் முனைந்திருக்கிறோம்..;?)
நன்றி வதீஸ்.. இப்படிப் பரவலான கதைகள் உலவுவது சகஜமே.. உண்மை பொய் அவரவருக்கே வெளிச்சம்..
யார் அந்த பிரகச்குமார்?G.V.PRAKAASH?
வந்தி, ஹீ ஹீ.. நாங்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும்போது செய்தவை அவை.. ;) இப்போதான் வெற்றியில் இந்த டமாரம் அடிக்கும் வேலைகள் இல்லையே..
ஆனால் இவையெல்லாம் சராசரி ரசிகர்களிடம் எங்கள் வானொலிகளைக் கொண்டுபோன சில யுக்திகள்..
ஆனால் நீங்கள் எனது நிகழ்ச்சி மட்டும் கேட்பது மகிழ்ச்சி தான் .. (என்ன செய்ய ஒன்றாய்ப் படித்த பாவம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது ;))
//காட்டுக்கத்தலை உருவாக்கியவர்களில் சிலர் இன்றைக்கு ஒலிபரப்புத்துறையில் இல்லையென்பது கே எஸ் பாலச்சந்திரன்,அப்துலஹமீத்,ராஜேஸ்வரி சண்முகம் போன்ற ஜாம்பவான்களை உருவாக்கிய இலங்கை ஒலிபரப்புத் துறைக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.//
மற்றவர் வம்பு வேண்டாம் ஐயா..ஜாம்பவான்கள் வரிசையில் இன்னும் ஒரு சிலரை விட்டுவிட்டதை உணர்கிறேன்.. ;) (சும்மா)
Joshua Sridhar is still working for Rahman as a Keyboard player (I think this news was in Vikatan). I don't think there is any problem between them
ஜேம்ஸ் வசந்தன் சுப்ரமணியபுரத்தில் மிரட்டினார். பசங்க ‘ஒரு வெட்கம் வருதே வருதே’ காதலர் குடியிருப்பு ‘உயிரே ... என் உயிரில் ஏன் வந்தாய்’ நான் இந்த பாடல்களை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
ஈசன் படத்தின் ஜில்லாவிட்டு பாடல் உலகப் புகழ் பெற்றதே. ஜேம்ஸ் வசந்தன் இந்த லிஸ்ட்டிலிருந்து விடுபட வேண்டியவர்.
அவரது வேலையை அவர் செவ்வனே செய்கிறார். அவர் காணாமல் போனவரோ (அ) காணாமல் போகப் போகிறவரோ அல்ல. நின்று ஆடப்போகிறவர். அவர் ஒரு ராஹுல் டிராவிட் (!)
//5.முதல் திரைப்படத்தில் பிரமாதமாக இசையமைத்து திரைப்படமும் வெற்றி பெற்று பாடல்கள் பேசப்பட்டும் பல இசையமைப்பாளர்களின் ஒரு சில திரைப்படங்களோடு காணாமல் போனது ஏன்?
----- ஜேம்ஸ் வசந்தன் -----
Post a Comment