
வாரணம் ஆயிரம்..
பல பேர் விமர்சனம் எழுதியாயிற்று.. படமும் நல்லாத் தானிருக்கு.. ஆங்கிலப் படங்களின் டச் அங்கே,இங்கே தெரிந்தாலும் மனதைத் தொடுகிறது..
சூர்யா தனது life time characterஐ செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. ஆனாலும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும்,இசையும் இல்லாமல் இந்தளவுக்கு இந்தப் படத்தை ரசித்திருக்க முடியுமா என்று எனக்குள்ளேயே கேட்டுப் பார்த்தேன்..

கொஞ்சம் கஷ்டம் தான்.. ஏழு பாடல்களையும் ஹாரிஸ் இழைத்து இழைத்துப் பின்னி இருக்கிறார்.திரைப்படத்தின் ஒவ்வொரு நிமிடதொடும் இசை அப்படி இணைந்து போகிறது.ஒரு பாடல் தானும் மோசம் என்றோ,கொஞ்சமாவது நல்லா இல்லை என்றோ சொல்ல முடியவில்லை.. பாடல்கள் வெளிவந்த போதே எனது மனதில் தனியிடம் பிடித்து இருந்துவிட்டன..
ஆரம்பத்தில் அடியே கொல்லுது மற்றும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ஆகியன தான் அதிகமாக எனக்குப் பிடித்தன.. அதற்குப் பிறகு ஒரு வலைப்பதிவில் 'அனல் மேலே பனித்துளி' பாடல் பற்றி உருகி ஒரு நண்பர் எழுதி இருந்தார்.. அதுவும் மனதுக்குப் பிடித்தது..
இப்போ காட்சி அமைப்புக்களால் அஞ்சலையும் மனசில நிக்கிறா.. பாடல் ஆடவைப்பதாக இருந்தாலும்,ஆடத் தோன்றாமல் அழத் தான் தோன்றுகிறது..
நல்ல பாடல்களை இசை அமைப்பாளரிடம் இருந்து வாங்கி (ஹாரிஸ் கௌதமுக்கு தரும் ஸ்பெஷல் எல்லோரும் அறிந்தது தானே.. ) அதைக் காட்சிப் படுத்துவதில் கௌதமை அடிக்க இப்போதைக்கு யாருமில்லை.. (மணிரத்னம்,ஷங்கர் கூட இவருக்குப் பின்னால் தான் என்பேன்)
இந்த வாரணம் ஆயிரம் பாடல்களில் ஒரு சிறப்பு இருக்கிறது.. நேற்று காலை விடியலில் இது பற்றி சொன்னேன்..

ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்தின் ஏழு பாடல்களுக்காகவும் மொத்தம் பதின் மூன்று பாடக,பாடகியரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
வழமையாக இவ்வாறு ஐந்திற்கும் மேற்பட்ட பாடல்கள் ஒரு திரைப்பட ஒலி நாடாவில் (இசைத் தட்டில்) வரும்போது,திரைப்படத்தின் நீளம் கருதி ஒன்றிரண்டு பாடல்கள் திரைப்படத்தில் இடம்பெறாமலே போகும்.ஆனால் இந்த ஏழு பாடல்களுமே படத்தில் வந்திருப்பது தான் சிறப்பே..
எனினும் நான் இன்று எழுத ஆரம்பித்ததும் ஆசைப்படுவதும் அண்மையில் வெளிவந்த புதிய பாடல்களில் என் மனம் கவர்ந்த பாடலான வாரணம் ஆயிரம் 'ஓ ஷாந்தி' பாடலைப் பற்றி..
பொதுவாக காலை நேரம் எனது நிகழ்ச்சியில் நீளமான பாடல்களை ஒலிபரப்புவதைக் கூடியளவு தவிர்த்துக் கொள்வேன்.. அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்போது விளம்பரங்களோடு அதிக பாடல்களை ஒலிபரப்ப முடியாதென்று..(நானும் பேசணும் இல்லே )
எனினும் பாடல் பிரபலமானால் எவ்வளவு தான் நீண்ட நேர அளவை எடுத்துக் கொண்டாலும் போட்டுத் தொலைக்கத் தான் வேண்டும்.. (ரஹ்மானின் பெரும்பாலான பாடல்கள் நீளமோ நீளம்.. அண்மையில் வெளிவந்த சர்க்கரைகட்டி,குசேலன்,தசாவதாரம் பாடல்களும் இதே ரகம் )
எனவே சின்னப் பாடல்களாகவும்,அதே நேரம் அவை பிரபல்யமாகவும் இருப்பதாகப் பார்த்துக் கொள்வேன்.. (முடிந்தவரை) அப்படி எனக்கென்றே ஒரு தனி பாடல்களின் செட்டே இருக்கின்றன.. தொடர்ந்து நம்ம நிகழ்ச்சி கேட்பவர்கள் அந்தப் பாடல்களை இலகுவாக இனம் காண்பார்கள்.அந்தப் பாடல்களை நான் play listஇல் போடாமலேயே நம்ம இசைக் கட்டுப்பாளர் பிரதீப் என் நிகழ்ச்சிக்கு போட்டுவிடுவார்.. ;) இந்தப் பிரதீப் தான் என் வலைப்பூவில் தற்போது காணப்படும் தலைப்புப் பகுதியை எனக்காக வடிவமைத்த திறமைசாலி.. (இப்பிடியெல்லாம் குளிர்வித்தா தான் அடுத்த முறை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கலாம் ;))
அப்படி அண்மையில் எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது தான்.. ஓ ஷாந்தி.. (தொடுவானம் சிவந்து போகும்)

கேட்டவுடனேயே பிடித்துப் போனது.. 'நெஞ்சுக்குள் பெய்திடும்' பாடலின் கொஞ்சம் மாற்றப்பட்ட வடிவமாக (version) இருந்தாலும் அதை விட இந்தப் பாடலில் எதோ ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.
ஒரு கிக்.. ஒரு வேகம்.. ஒரு காதலின் குழைவு.. ஒரு நெருக்கம்.. ஒரு கிறக்கம்.. என்று அனைத்துமே கொண்ட ஒரு மயக்கம் இந்தப் பாடலில்..இவை எல்லாவற்றுடனும் சிறிய பாடலாகவும் இருந்தது எனக்கு மேலும் ஒரு பிளஸ் போயின்ட்.
கடந்த வாரம் வரை எனக்கு அந்தப் பாடலைப் பாடியோர் யாரென்று தெரியாது. அந்தக் குரல் யாரென்று தேடியவேளையில் மேலும் ஒரு சந்தோஷம்.. நம்ம S.P.B.சரண் பாடியிருக்கிறார்.
நம்ம சரண் என்று சொன்னதுக்குக் காரணம் SPBஇன் புதல்வர் சில தடவை இங்கு வந்த வேளைகளில் என்னுடன் நெருக்கமான நட்பைப் பேணியவர்.. இந்தியா நான் போன வேளைகளிலும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எப்படியாவது என்னை சந்திக்க நேரம் ஒதுக்கி விடுவார். இப்போ கொஞ்ச நாளா டச் விட்டுப் போச்சு.. எனினும் நல்ல மனிதர். பண்பானவர்- அப்பாவைப் போலவே..அவரது தமிழ் உச்சரிப்பும் அற்புதம்.
ஒரு முறை நான் அவரை தொலைக்காட்சியில் (இலங்கையில் தான்) பேட்டி கண்டபோது தான் அழகான தமிழை உச்சரித்துப் பாடுவதால் தான் தனக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லையோ தெரியாது என்று கவலையோடு சொன்னார் என்னிடம்.
அவரது குரலும் எனக்கு மிகப் பிடிக்கும்.. இன் ஆரம்ப காலக் குரல் போல சற்றும் பிசிறு தட்டாமல் இருக்கும் அவர் குரலைப் பெரிதாக என் யாரும் பயன்படுத்துவதில்லை என்று எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியம்..இத்தனைக்கும் இவர் பாடிய அநேகமான பாடல்கள் ஹிட்!
இந்தப் பாடலும் ஹரிசின் வழமையான டச் உடைய பாடல் தான்.. அவருக்கே உரிய கிட்டார் பின்னணி,துடிப்பான அதிகரித்துக் கொண்டு செல்லும் இசைத் துடிப்பு.. தாமரையின் அழகான வரிகளை சிதைக்காத மெட்டமைப்பு..
வரிகளில் கவித்துவம் பெரிதாக இல்லை.. எளிய,அனைவருக்கும் புரியக் கூடிய வரிகள்.
எனினும் சில வரிகள் மனது தொடுகின்றன..
உனைக் காணும் நேரம் வருமா..
இரு கண்கள் மோட்சம் பெறுமா..
விரலோடு விழியும் வாடும்..
இந்த வரியில் நாகரிகமான காதல் ஏக்கம் தொனிக்கிறது..
எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க..
இந்த வரிகள் போதும் கதாநாயகனின் ஏக்கம் சொல்ல.. கனவில் காதலியுடன் அவன் சென்றதை காற்று ஏக்கத்துடன் பார்க்கிறதாம்..
தாமரை மீண்டும் கலக்கி இருக்கிறார்..
திரைப்படக் காட்சிகளும் பிரமாதம்..
இந்த ஒ ஷாந்தி எனக்குப் பிடித்திருக்கிறது.. உங்களுக்கு என்ன மாதிரி?
சரனின் குரலோடு ஆரம்பத்திலும் இடையிலும் கிளிண்டனின் குரலும் இணைகிறது..
எல்லாம் சரி யார் அந்த ஷாந்தி? காரணம் கதாநாயகியின் பெயர் மேக்னா தான்.. வழமை போல் சினிமாப் பாடல்களில் இதெல்லாம் சகஜம் தானா?
13 comments:
எனக்கும் பிடிக்குமே..
எனக்கும் பிடிக்கும் பாடல் அருமை
பிரதீப்க்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க லோசன்.தலைப்புப் பகுதி நல்லா இருக்கு.
தலைப்புப் பகுதி நல்லாத் தான் இருக்கு,. அதில இருக்கிறவர்/பொருந்தாமல் இருக்கிற மாதிரி இருக்கு,..
ஏதோ தோணிச்சு,. சொல்லிட்டன்.. வரட்டா...
I am really interested i those songs anna after listening throught VEttri..
After that I downloaded anna(Illegally).............
ம்..எனக்கும் பிடித்த பாடல்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பெரும்பாலான படங்களில் இப்படியான் குறும்பாடல்களை எதிர்பார்க்கலாம். மின்னலே படத்தில் “இரு விழி உனதே”, “நெஞ்சை பூப்போல்” என்று பிரபலமான குறும்பாடல்கள் உண்டு. உங்களைப் போன்ற வானொலி அறிவிப்பாளர்களும் இந்தப் பாடல்களை Theme இசையாக சில நிழச்சிகளுக்கு பாவித்ததாக ஞாபகம்...
:)
இந்தப் பிரதீப் தான் என் வலைப்பூவில் தற்போது காணப்படும் தலைப்புப் பகுதியை எனக்காக வடிவமைத்த திறமைசாலி.. //
இவரது திறாமையை நன்கு அறிந்தவன் நான். பாடசாலை நாட்களில் பில்லி என்ற பெயரில் இவர் வரைந்த படங்கள் ப பார்த்திருக்கிறேன். பின்னர் 95ன் பின்னர் திரைப்படங்களாஇ பார்த்து அவை பற்றி விமர்சனமும் எழுதி, திரைப்பட காட்சி ஒன்றை ஓவியமாக வரைந்தும் இருப்பார்.
அதன் பின்னர் 97ல் முதன் முதலாக அவர் கொழும்பு வந்தபோது நான், அவர் , மற்றும் நண்பன் குணாளன் மூவரும் மாஜெஸ்டி ப்ளாசா சென்றது ஒரு மறக்க முடியாத நினைவு
இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம், குழந்தையைக் கடத்தி மூன்று கோடி ரூபாய் கேட்பவனின் பெயர் ஆஸாத். இவனைத் தேடிச் செல்லும் போது சூர்யா சந்திக்கும் மற்றொரு கிரிமினலின் பெயர் டப்பு மாலிக். இந்த இரண்டு பெயர்களும் ஏதோ சந்தர்ப்பவசமாக வைக்கப் பட்டதல்ல. மிகத் தெளிவாக யோசித்து, திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ள பெயர்கள். ஏனென்றால், சூர்யா டப்பு மாலிக்கையும், ஆஸாதையும் தேடிச் செல்லும் இடங்கள் புராணா தில்லி என்று அழைக்கப்படும் பழைய தில்லி. இன்னும் வளர்ச்சி அடையாத, அரசாங்கத்தின் கருணைப் பார்வை படாத பகுதி. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. பார்வையாளர்களுக்கு இன்னும் சரியாகப் புரியாமல் போய் விடப் போகிறதே என்ற கவலையில் இயக்குனர் இன்னொரு விஷயத்தையும் சேர்த்திருக்கிறார். அதாவது, சூர்யா மாலிக்கையும், ஆஸாதையும் தேடிச் செல்லும் போது பாங்கு வேறு ஒலிக்கிறது. போதுமா?
ஏன் ஐயா, குழந்தைகளைக் கடத்துபவர்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்க வேண்டுமா? ஏற்கனவே கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் இரண்டு ஹொமோசெக்ஷுவல்கள் குழந்தைகளைக் கற்பழிக்கிறார்கள்; கொலை செய்கிறார்கள். ஹோமோசெக்ஷுவல் என்றால் இப்படித்தான் கிரிமினலாக இருப்பான் என்ற பொதுப் புத்தியே இந்த இடத்தில் செயல்பட்டிருக்கிறது. அது போதாது என்று அந்த இரண்டு கிரிமினல்களின் பெயர் அமுதன், இளமாறன். அதாவது, இழந்து போன தமிழ் அடையாளத்தைப் பற்றிப் பேசுபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பொதுப் புத்தி.
பொதுவாகவே, சட்டத்துக்குப் புறம்பான குற்றச் செயல்களைப் புரிபவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும், தலித்துகளாகவும், முஸ்லீம்களாகவும், விளிம்பு நிலை மக்களாகவுமே ஜனரஞ்சக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள்.இது ஏற்கனவே ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் மீது தொடுக்கப்படும் அதிக பட்சமான கருத்தியல் வன்முறையாகும். உடனடியாக இந்தப் படத்திலிருந்து இப்பகுதிகள் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
படத்தின் மிக மோசமான அம்சம், சூர்யாவின் அப்பா கிருஷ்ணனும் மாலினியும் (சிம்ரன்) கல்லூரி மாணவர்களாகச் சந்தித்துக் கொள்வதும், காதலிப்பதுமான காட்சிகள்தான். இந்தக் காட்சியில் பார்வையாளர்கள் வாய் விட்டுச் சிரிப்பதைக் காண முடிந்தது. காரணம், இந்தக் காட்சியில் சிம்ரன் சூர்யாவுக்கு அக்கா மாதிரியோ, அம்மா மாதிரியோ கூட இல்லை; பாட்டி மாதிரி இருக்கிறார். ஒரு பாட்டியும் இளைஞனும் காதலித்தால் சிரிப்புதானே வரும்? பார்க்கவே சகிக்க முடியாத காட்சி இது. உதாரணமாக, நூலகத்தில் சந்தித்துக் கொள்வது. ஆனால் சூர்யா பள்ளிக்கூட மாணவனாக வரும்போது வெகு இயல்பாக இருக்கிறார். அவருடைய கடுமையான உழைப்புக்கு (உபவாசத்துக்கு) ஒரு பாராட்டு. தவிரவும் நடிப்பில் சூர்யா இந்தப் படத்தில் உச்சங்களைத் தொட்டிருக்கிறார். பள்ளி மாணவனாகவும், பிறகு மேக்நா இறந்தவுடன் போதை மருந்து அடிமையாகவும் அவரது நடிப்பு தமிழ் சினிமாவில் நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்.
படத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று, இதன் வசனம் என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த வசனங்களெல்லாம் ஆங்கிலத்தில் வருகின்றன. சூர்யா மேக்நாவிடம் கூறுகிறான்: “I will come into your life and sweep you off your feet.” வாரணம் ஆயிரம் என்று பெயர் வைத்தவருக்கு இந்த அருமையான வாசகத்தைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்றா தெரியாமல் போய் விட்டது? என்னதான் கௌதமின் சுயசரிதைத் தன்மை கொண்ட படமாக இருந்தாலும் அவரைப் போலவே அவரது கதாபாத்திரங்களும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்ள வேண்டுமா என்ன? சூர்யாவின் அப்பா கிருஷ்ணன் ஒரு மத்திய அரசாங்க ஊழியர். அவர் தன் மகனுக்கு ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவாரா? மூகாம்பிகை எஞ்சினியரிங் கல்லூரியில் படிக்க்கும் ஒருவன் – அதிலும் ’ அரியர்ஸ் ’ வைத்திருப்பவன் – அப்படி ஒரு மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவனைப் போலவா ஆங்கிலம் பேசுவான்?
இன்றைய தமிழ் சினிமாப் பாடல்கள் மிகவும் சீரழிந்த நிலையில் இருந்து வருகின்றன. வெறும் ஐம்பது வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஜிம்கா வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் சினிமா பாடல் ஆசிரியர்கள். இசையோ உலகத் தரம். அதன் பாடல் வரிகளோ குப்பை. இதுதான் இன்றைய தமிழ் சினிமாப் பாடல்களின் நிலை. ஆனால் வாரணம் ஆயிரத்தில் இசையும் பாடல்களும் தமிழ் சினிமா இசையில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றன. தாமரையின் பாடல் வரிகளில் கவித்துவம் கொஞ்சுகிறது; குறிப்பாக, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன் தினம். கண்ணதாசன், வைரமுத்து இருவருக்கும் அடுத்தபடியாக அந்த இடம் வெற்றிடமாகவே இருந்தது. அந்த இடம் தாமரைக்குக் கிடைத்து விட்டது என்று சொல்லலாம்.
ஹாரிஸ் ஜெயராஜ் : பாராட்ட வார்த்தைகளே இல்லை. தனது இசையால் இளைஞர்களைப் பைத்தியம் பிடிக்கச் செய்து விட்டார். இந்தப் படத்தின் பாடல் ஆல்பம் உலகின் சிறந்த பாப் இசை ஆல்பங்களுக்கு ஈடானது. அதிலும் அந்த அடியே கொல்லுதே என்ற பாடல் ... தமிழில் இப்படி வருவது அபூர்வம். இந்தப் பாடலைப் பாடியிருக்கும் ஷ்ருதி ஹாஸனுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பது தெரிகிறது. இவரது குரலில் லெபனானைச் சேர்ந்த அரபிப் பாடகியான Nancy Ajram இடம் உள்ள passion தெரிகிறது. இவர் வெறுமனே தமிழ், இந்தி சினிமாப் பாடல்களுக்குப் பாடுவதோடு நிறுத்தி விடக் கூடாது. அதற்கு மேலும் செல்ல வேண்டும்.
இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொருவர் இதன் கதாநாயகி ஸமீரா ரெட்டி. இவர் நடித்த முதல் படமான கால்புருஷ் வங்காள இயக்குனர் புத்ததேவ் தாஸ் குப்தாவின் இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்து உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் இவரது பாத்திரமும், நடிப்பும் சிலாகிக்கப் பட்டது. இந்தப் படத்திலும் இவரது நடிப்பு தமிழுக்குப் புதிது. ஆனால் விரைவிலேயே தமிழ் சினிமாவின் குத்து டான்ஸுக்கு இடுப்பை ஆட்டும் நடிகையாக மாறி விடாமல் இவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
அண்ணா, நீங்கள் S.P.B சரண் பற்றி கூறும்போது நெடு நாளாய் கேட்க வேண்டுமென நினைத்த விடயம் ஞாபகம் வந்தது.S.P.B (Snr) ஹரிசின் இசையில் பாடாமைக்கு என்ன காரணம்?அருள் படத்தில் "பத்து விரல் உனக்கு.." என்ற பாடல் மாத்திரமே ஞாபகத்துக்கு வருகிறது.
பாடலை முதலில் கேட்க வேண்டும்..
// பாடல் ஆடவைப்பதாக இருந்தாலும்,ஆடத் தோன்றாமல் அழத் தான் தோன்றுகிறது..//
வீட்டில் தெரியுமா? கிகிகிகி
mundhinam partthen padal innum suhamaha irukkum kettupparungal
------------------------------
uditnarayanani yen tamil isai amaippalarhal thodarndhu payan padutthuhirarhal(vidyasagar,srikanthdeva,yuvan)idarku oru kandanap padhivu podavendum enbadhu enadhu aaval
Post a Comment