இன்று காலையில் இணையப் பக்கங்களை மேய்ந்த போது கிடைத்த ஒரு சுவாரஷ்யமான விடயம் இது..
அமெரிக்காவில் ஒரு ஒன்பது வயது சிறுவன் புத்தகம் வெளியிட்டுள்ளான். இந்தக் காலத்தில் சின்ன வயதில் நூல்கள் எழுதி வெளியிடுவது பெரிய விஷயமே இல்லை.. ஆனால் அவன் எழுதிய புத்தகம் தான் பெரீய விஷயம். "How to talk to girls" இது தான் அவன் புத்தகத் தலைப்பு..
ஒன்பது வயசுப் பொடியன் உலகத்துக்கே சொல்லித் தாரான்..
அலெக் கிறேவேன்(ALEC GREVEN) என்ற பெயருடைய இந்த சிறுவன், பெண்களை அதுவும் அழகான பெண்களை எப்படியெல்லாம் கவரலாம் என்று ரூட்டுப் போட்டுத் தாரான். எப்படி இருக்கு?
ஆங்கிலத்தில் Dating advice என்று சொல்லப்படக் கூடிய இந்த விஷயங்கள் அமெரிக்காவின் ஒன்பதே வயது நிரம்பிய இவனிடமிருந்து வருவது தான் இந்த நூல் பரபரப்பாவதற்கான காரணம்.
அவனது பார்வையில் அழகான பெண்களை அடையாளம் காண்பது இலகு.அவன் சொல்கிறான் "அழகான பெண்கள் எப்போதும் அழகான,கவர்ச்சியான ஆடைகளை அணிந்திருப்பார்கள்,பெரிய காது வளையங்களை மாட்டி இருப்பார்கள்,விலை உயர்ந்த நகைகள் அணிந்திருப்பார்கள்"என்று.
அவனது சில கூற்றுக்களைப் பாருங்கள்..
அழகான பெண்கள் அடிக்கடி அதிகளவு பெட்ரோல் கேட்கும் கார்கள் போன்றவர்கள்.(இப்பவே அனுபவமா தம்பி?)
எனக்கு பெண்களோடு பேசப் பயந்த பல நண்பர்கள் இருக்கிறார்கள்..(உன்னை மாதிரியே எல்லோரும் இருப்பாங்கள?)
அழகாகத் தலை வாரினால் பெண்களுக்குப் பிடிக்கும்; ஸ்வெட்டர் அணியாதீர்கள்.(அப்போ முடி வளர்த்த கூந்தல் அழகர்கள் எல்லாரும்?குளிர்ந்தாக் கூடவா?)
நீங்கள் ஒரு பெண்ணைப் பார்த்து ஹாய் சொல்லி அவளும் பதிலுக்கு ஹாய் சொன்னால் அப்போதே ஒரு உறவு ஆரம்பித்து விடும்..
(நாங்களும் தானே ஹாய் மட்டுமல்ல இன்னும் என்னென்னவோ சொல்லுறோம்.. ம்கூம் ஒன்னும் நடக்கலையே என்று இங்கே நிறையப் பேர் ஏங்கிறாங்க) )
இப்படியே ஏதோ அனுபவசாலி போல அடுக்கிக் கொண்டே செல்கிறான்.
ஆனால் தனது காதல் பற்றிப் பேசும்போது இப்போது தான் கொஞ்சம் (!) சிறுவன் என்றும் இன்னும் கொஞ்சக் காலத்தில் பார்க்கலாம் என்று சொல்கிறான்.. (ரொம்ப விவரம் தான்)
கையெழுத்துப் பிரதியாக அவன் பாடசாலையில் ஆரம்பித்த அவனது நூல், இப்போது அமெரிக்காவின் எல்லா பிரபல புத்தக விற்பனை நிலையங்களிலும் பரபரப்பாக விற்கிறதாம்.(அமெரிக்க நண்பர்கள் இதை உறுதிப் படுத்தினால் நல்லது)
தான் பதினைந்து வயதாகும் வரை யாவது காதல் வயப்படப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக சொல்கிறான் இந்த தெளிவான பையன்..
அதுபோல டேட்டிங் என்றால் பெற்றோருக்குத் தெரியாமல் வெளியே டின்னருக்கோ,தனியாகவோ போவது தான் என்றும் சொல்கிறான்.. (இவ்வளவு எழுதிறியே உண்மையிலேயே தெரியாதா?இல்லே நல்லவன்னு காட்டிரியா?)
பிஞ்சிலே பழுத்தது என்று நாம் சொல்லக் கூடிய அலெக்கைப் பற்றி அவனது அம்மா சொல்கிறார் "அவன் வயதுக்கு மீறி அவன் சிந்திக்கவில்லை.ஆனால் மனதளவில் முதிர்ச்சி(matured) அடைந்துள்ளான்.காரணம் அவன் எந்த நேரமும் ஏதாவது வாசித்தபடி..உண்ணும் மேசையிலும் புத்தகங்களோடு தான் அமர்கிறான் "
அவனது பாடசாலைகளிலும் அவனைப் புகழ்கிறார்கள்.. மாற்ற மாணவர்களுக்கு முன்மாதிரி.. அவனது புத்தகம் தான் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்ற நூல் .. இப்படி ஏராளமான பாராட்டுகள்..

அலெக் கிரேவேனைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் ஒரு பெரிய எழுத்தாளராகவும், பகுதி நேரத்தில் ஒரு புவியியலாலராகவோ,புதை பொருள் ஆய்வாளராகவோ வர ஆசைப்படுவதாக சொல்லி இருக்கிறான்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இவன் கொடுக்கும் டிப்ஸில் இப்பவே இவன் ஒரு காதல் மாமா ஆயிட்டான். இப்பவே ஒன்பது வயதில் இப்படி எழுதிரான்னா எதிர்காலத்தில் என்னென்ன எழுதுவானோ என்று தான் பயமாக இருக்கிறது..
இதை இன்று எனது காலை நிகழ்ச்சியான் 'விடியலில்' சொல்லி, நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கும் போது நண்பர் இர்ஷாத் ஒரு தகவல் ஒன்று அனுப்பினார்..
இலங்கையின் மாத்தறைப் பகுதியில் ஒரு பதின்மூன்று வயது சிறுமி குழந்தை ஒன்றுக்கு தாயாகி இருப்பதாக அவர் சொன்னார்.
அடப் பாவிகளா (விவேக் ஸ்டைலில் வாசிக்கவும்) அங்கே அவன் அமெரிக்காவில் சொல்லி மட்டும் தான் குடுத்தான்.. இங்கே செயலிலேயே காடீடிங்களே.. .. (நன்றி இர்ஷாத்)
15 comments:
நல்ல தகவல். இது போன்று சிலருக்குத்தான் வாய்ப்பு கிடைகிறது. வாய்ப்பு கிடைக்காமல் என்னைப் போல பல சின்ன மேதைகள்(?) இருக்கிறார்கள் என்பதை நினைவு கூற விழைகிறேன்.. :))))
அடங் கொக்கமக்கா
நான் காலையில் வானொலியில் கேட்டவுடன் வியந்து விட்டேன். அமெரிக்காவில அவனுடைய புத்தகத்தை பாடசாலையில் வெளியிட அனுமதித்தார்கள் இலங்கையில் அப்படி அனுமதித்து இருப்பார்களெனின் இதேபோல் பல நூல்கள் வெளிவந்துதிருக்கும் ஹாஹா......
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>
அடேங்கப்பா...9 வயசிலையா..? ஏலாது.....
தான் பதினைந்து வயதாகும் வரை யாவது காதல் வயப்படப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக சொல்கிறான் இந்த தெளிவான பையன்..
//
நாங்கள்கூடத்தான் வாழ்நாள்வரை காதலிக்கப்படப்போவதில்லையென முடிவெடுத்திருந்தோம்.
இவனை மணிமேகலை பிரசுரம் அழைத்து புத்தகங்கள் வெளியிடும்.
இப்பவே டேட்டிங் டிப்சு கொடுக்கிறான். பிற்காலத்தில நைற்றிங் டிப்செல்லாம் கொடுப்பான் போல :)
Hehehe that was funny :)
// அதுபோல டேட்டிங் என்றால் பெற்றோருக்குத் தெரியாமல் வெளியே டின்னருக்கோ,தனியாகவோ போவது தான் என்றும் சொல்கிறான்.. (இவ்வளவு எழுதிறியே உண்மையிலேயே தெரியாதா?இல்லே நல்லவன்னு காட்டிரியா?)
//
இல்லையா பின்னே..
அப்போ டேட்டிங் என்றால் என்ன? விளக்கம் பிளீஸ்...
நானு நல்லவனா? அவ்வ்வ்........
(நாங்களும் தானே ஹாய் மட்டுமல்ல இன்னும் என்னென்னவோ சொல்லுறோம்.. ம்ம் ஒன்னும் நடக்கலையே என்று இங்கே நிறையப் பேர் ஏங்கிறாங்க) -
====&&&&=====
தங்கள் அனுபவங்களை கூட யாரையும் மேல்கோள் காட்டியா சொல்லுவார்கள் ..
ஹா ஹா
Super anna
பிஞ்சில பழுத்தது ;)
13 வயதே அதிகம்.
இப்பவே ஒன்பது வயதில் இப்படி எழுதிரான்னா எதிர்காலத்தில் என்னென்ன எழுதுவானோ என்று தான் பயமாக இருக்கிறது..
உண்மைதான் அண்ணா.. இப்பவே இப்படி என்றால்.. பிறகு சொல்லத்தேவையே இல்லை...!
Neengal sonnathu sari. Naan konjan pakkathila thaan irukkiran thirumpi paakathaingo.. athaan CANADAvila thaan irukkiren. Greven pattiya videokkalai paarthen ..athan ungalukkum anuppirean ..ivarai orunaal inga irukkira TV inta nightshow proframila paarththanaan.
Loshan Anna naan ungaloda thanipadda reethiyil kathaikka venum... kathaichchu kana naal Jabagam irukko theriyala ...Vairamuthuda kavithai thokkupu colombila orukka thanthinga oru school researchkku ippa canadavila irukkiran ..NEENGA SOOIYANILA IUKKUMPOTHE PALAKKUM .....
vettri kekkiranan Vaalthukkal,.
http://video.google.com/videosearch?sourceid=navclient&ie=UTF-8&rlz=1T4ADBS_enCA289CA290&q=ALEC%20GREVEN&um=1&sa=N&tab=wv#
asathirika appu template illam puthusha pottu irukeekaa naan athaithhan sonean
Post a Comment