December 30, 2008

2008இல் அதிகம் தேடப்பட்டவர்கள்

இவ்வாண்டு (2008) இணையத் தேடுதளங்களில் ஒன்றான YAHOO – யாஹு மூலம் அதிகம் தேடப்பட்ட நபர்கள் / விஷயங்கள் இவை தான்.


1. பிரிட்னி ஸ்பியர்ஸ் : பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்தத ஒரு காலம் ( அந்தப் பாடல் வீடியோவாக வரும் போது சின்னத் துண்டு மட்டுமே அணிந்து வருவது எங்களுக்கு மேலும் குழுமை தரும் விஷயம் ) எனினும் அந்த வருடத்திலே இந்த பொப் தேவதை அதிகம் பிரபலமானத வேறு பல விடயங்கள் மூலமாக.
பொலிசால்
கைது, வைத்தியசாலையில் அனுமதி, மனநோய் இருக்கிறதா? எனப் பரிசோதனை, பின் தந்தையின் பாதுகாப்பு, முன்னாள் காதலருடன் மீண்டும் கும்மாளம் என்று பிரிட்னியின் வழியே தனிவழி.
இவ்வளவுக்குப் பின்னும் MTV விருதை
வென்றார். வுமனைசர் (Womanizer) என்ற இசைத்தொகுப்பு மூலம் சாதனைபடைத்தார். 27 வயதுக்குள் எத்தனை பரபரப்பு; எத்தனை ஆட்டங்கள்;

2. WWE : ரெஸ்லிங் (Wrestling) .போட்டிகளில் 2ம் இடத்தைப்பிடித்துள்ள WWE இந்த வருடம் ஏற்படுத்திய பரபரப்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஜீன் மாதம் மேடையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு, கவர்ச்சி அழகிகளை மேடைகளில் தாராளமாகத் திரியவிட்டது, திட்டமிட்டு பரபரபாக்கி ஏற்படுத்தப்பட்ட சண்டைகள், புதிய வீடியோ கேம்ஸ், திரைப்பட வெளியீடுகள் என்று றுறுநு இணையத்தளங்களை அதிகமாகவே ஆக்கிரமித்தது.


3. பராக் ஒபாமா : 2008இன் மிகப்பெரிய கதாநாயகர்களில் ஒருவர். ஹிலரி கிளின்டனில் ஆரம்பித்து, இறுதியில் மக்கெய்ன் வரை தோற்கடித்த ஒபாமாவால், பிரிட்னியையும், றுறுநுயையும் மட்டும் இணையத் தேடலில் தோற்கடிக்க முடியவில்லை எனினும் ஒபாமாவின் இளைஞரைக் குறிவைத்த இணையத்தளம்/Facebook மூலமான பிரசார யுக்திகள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் புதுசு ஒபாமா புதுசு.

4.மிலே சிரஸ் (Miley Cyrus) : இந்த ஆண்டுக்கு முன்னர் டிஸ்னி தொடரான ஹன்னா மொன்டான (Hanna Montana) கதாநாயகியாகவே அறியப்பட்டிருந்த 15 வயது மட்டும் நிரம்பிய மிலே சிரஸ் - இவ்வருடத்தின் பரபரப்பு நாயகிகளில் ஒருவராக மாறியது ஒர சுவாரஸ்யமான கதை.
எதிர்கால ஹொலிவூட் நாயகி எனக் கருதப்பட்டவர். வனிட்டிஃபெயார் (Vanity Fair) என்ற சஞ்சிகையில் கொடுத்த மிகக் கவர்ச்சியான போஸ்கள் மூலம் பெரும் பரபரப்பைக் கிளறிவிட்டார். வெறுமனே ஒரு படுக்கை விரிப்புடன் இந்தப் பதினெட்டு வயது நிரம்பாத சிறுமி காட்டிய ஆபாச போஸ்களுக்கு – அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு. பகிரங்க மன்னிப்பு கேட்டுத்தப்பித்தார். எனினும் இளைஞர் மத்தியிலும், இணையத்திலும் அதிகம் தேடப்படுபவரில் ஒருவராகிவிட்டார்.


5.RuneScape : (இணையத்தள விளையாட்டு) : பழைய வகைக் கணினிகளிலும் செயற்படக்கூடியது என்பது ஒரு மேலதிக தகுதி. புதிய கிராபிக்ஸ் யுக்திகள் மூலம் இவ்வருடத்தில் அதிகம் பேரை ஈர்த்தது. பலபேர் விளையாடக்கூடியது இதன் சுவாரஸ்யத்தை அதிகரித்துப் பலபேரைத் தேடவைத்தது. இதில் வெற்றிபெற உண்மையிலேயே பணத்தைச் செலவழிக்கும் கறுப்புச் சந்தை உருவானது பற்றிய சாச்சை ஒரு தனிக்கதை.

6.ஜெசிக்கா ஆல்பா : இவர் நடித்திருந்த 2007 திரைப்படங்கள் எவையுமே நன்றாகப் போகவி;ல்லை. அதைவிட மோசம், மிக மோசமான நடிகை விருதுக்காக 3 தடவைகள் நியமனம் பெற்றார். எனினும் இவர் பரபரப்பானதும், பிரபல்யமானதும் இவரது திருமண மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் வெளியான பின்தான். இந்தப்படங்கள் ழுமு சஞ்சிகையில் வெளியிடுவதற்கு இவர் பெற்றதொகை 1.5 மில்லியன் டொலர்கள்.

7.நருட்டோ - NARUTO : ஒரு கேம்; ஒரு மிருகம்; ஒரு பாத்திரம்; எது வேண்டுமானாலும் சொல்லலாம். நின்ஜாவில் வருகின்ற கற்பனாபாத்திரங்களில் ஒன்றான இந்த நருட்டோ இணையப் பாவனையாளர்களில் அதிக ரசிகர்களையுடைய பாத்திரமாக மாறியிருப்பது சாதனையே. நம்ம நமீதா, மேலைத்தேயக் கவர்ச்சி மொடல்கள் பலபேரையும் முந்தியிருப்பதானது பெரிய விஷயமில்லையா?

8.லின்ட்ஸே லோஹான் : கடந்த வருடங்களில் மிகப் பிரபலமாக இருந்து, பின் மிக மோசமான அவமானங்களுக்கு உட்பட்டு, தனது புகழின் இறங்குமுகத்தில் இருந்;து, 2005இல் ஓரளவு தன்னை சீரமைத்துள்ளார். லின்ட்ஸே லோஹான் அதிகம் தேடப்பட நல்ல காரணங்களுக்கும் உண்டு. விவகாரமான விஷயங்களும் உண்டு. அவர் அரசியல் பற்றிப் பதிவுகள் எழுதியது, புதிய மர்லின் மன்றோவாக போஸ் கொடுத்தது போன்றவையும். விவகாரமான விஷயங்களில் இரு திரைப்படங்களிலிருந்து நீக்கப்பட்டது, உலக இசைத்திருவிழாத் தொகுப்பாளராக இருந்து இடைநடுவே வெளியே அனுப்பப்பட்டது, பல புதிய காதல்கள் என்பவற்றையும் சொல்லலாம்.

9.ஏஞ்சலினா ஜோலி : ஒரு கனவு தேவதை, ஹொலிவூட்டின் அழகுராணி என்பதெல்லாம் கடந்து அன்பு அம்மாவாகப் பெருமைப் பெயர் பெற்றது. உலகின் பெருமை மிகுந்த ஃபோர்ப்ஸ் (Forbes) , கின்னஸ் போன்ற பதிவுகளிலும் இடம்பிடித்தவர். பல்வேறு பாத்திரங்களில் - ஒரு அதிரடி நாயகியாக – கார்ட்டூன் பின்னணிக்குரலாக புகழ்பெற்று மில்லியன் கணக்கான டொலர்களை உழைத்தாலும், ஒஸ்கார் (Oscar) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் - எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் புகழினை ஏஞ்சலினாவிற்கு தந்தது. இவரும் இவரது நட்சத்திரக் கணவர் பிராட் பிட்டும் இணைந்து நல்லகாரியங்களுக்கு வழங்கிய நன்கொடைதான்.
அந்தத்தொகை இலேசுப்பட்டதல்ல – 14 மில்லியன் டொலர்கள்.


10.அமெரிக்கன் ஐடல் - American Idol : 2007ம் ஆண்டின் அமெரிக்கன் ஐடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியை விட இவ்வாண்டு அமெரிக்க FOX தொலைக்காட்சி அதிக நேயர்களைப் பெற்றுத்தந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏராளமான புதிய இளையவர்கள் வெளிவந்ததன் மூலம் இணையத்தேடுதலிலும் டொப் டென்னில் இடம்பெற்றுள்ளது.

17 comments:

கிடுகுவேலி said...

நன்றி லோஷன். தேடல் உள்ள வானொலிக் கலைஞன் நீங்கள். பயனுள்ளதாக அமைந்தது பதிவு. தொடருங்கள்.

ஆதிரை said...

Google தேடுதளத்தில் 2008ம் ஆண்டு அதிக அளவில் தேடப்பட்ட சினிமா பிரபலங்களில் நமீதாவுக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் கேத்ரீனா கைப்பும், சல்மான்கானும் உள்ளனர். அசினின் பெயர் அந்த லிஸ்டில் இருந்ததாக தெரியவில்லை.(நான் யாரையும் சீண்டவில்லையுங்கோ...)

3 கோடிக்கு மேற்பட்ட தடவைகள் நமீதாவின் பெயரைத் தேடியிருக்கிறார்களாம். அவர்களில் ஒருத்தராக நீங்களும் இருந்தால் சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்...

Unknown said...

Saturday, December 27, 2008
சர்வதேச வானொலி - நவம்பர் 2008


வெளிவந்துவிட்டது நவம்பர் சர்வதேச வானொலி இதழ். இந்த இதழில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் நாகபூசணி கருப்பையா அவர்களின் சிறப்பு செவ்வி இடம்பெற்றுள்ளது. வளமையானத் தொடர்களுடன் 24 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.
http://vaanoliulagam.googlepages.com/Nov2k8.pdf
உங்களின் இல்லதிற்கே இதழ் வர... தொடர்பு கொள்க 98413 66086. ஆண்டு சந்தா ரூ.100/-

Labels: சர்வதேச வானொலி - நவம்பர் 2008

posted by வானொலி | 5:15 PM | 0 comments

தமிழ் மதுரம் said...

அன்புடன் லோசனுக்கு! எனது தலைவலிக்கு மருந்து கொடுக்க முடியுமா??? ஒருவர் என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தொல்லை செய்கிறார். ஆதலால்????

என்னிடம் அப்புக் குட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் விடை சொல்ல முடியாத சந்தர்ப்பத்தில் எனது நண்பர்கள் பலரை இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் தார்மீகக் கடமைக்கு அழைக்கின்றேன்.. அவர்கள் வேறு யாருமல்ல நட்சத்திரமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் நண்பர் லோசன், சாரல் மழை தூவும் சயந்தன், அறிவுப் பசி போக்கிக் காதற் புகழுரைக்கும் காரூரன், வானம் வசப்பட வைத்து, உப்புமடச் சந்தியில் காத்திருக்க வைக்கும் ஹேமா, நட்பாய் பெண்ணியம் பேசி , சிரிப்பால் புரிய வைக்கும் சினேகிதி இவர்களுடன் தமிழோடு தமிழால் வலம் வரும் சாந்தி முதலிய அன்புள்ளங்கள். இது பற்றி மேலும் படிக்க என் பக்கம் வருக???

G.S.Sethukavalar said...

உலகில் எதிர்மறையான விடயங்களுக்கே என்றும் மவுசு. பிரிட்டனி இசைதுறையில் கொடிகட்டியபோது அடையாத பிரபல்யத்தை இப்போது அடைந்துள்ளார்.

kuma36 said...

///// WWE : ரெஸ்லிங் (Wrestling)////

நானும் அதிகமாக சென்ற தளம் இது
www.wwe.com

Unknown said...

நேற்று
//(நான் பார்த்துட்டனே.. ஆனாலும் இங்கே போட மாட்டேனே.. ;))//


இன்று
//சின்னத் துண்டு மட்டுமே அணிந்து வருவது எங்களுக்கு மேலும் குழுமை தரும் விஷயம் எனினும்//


இந்த பூனையும் பால் குடிக்குமான்னு நினைச்சேன். அது என்னடான்னா மூடிய‌ open பண்ணி பீர்ரே அடிக்குதே?

Anonymous said...

இலங்கையில் அதிகம் பார்க்கப்பட்ட இணையங்கள், இலங்கையர் அதிகம் பார்த்த முத்த பத்து இலங்கை இணையங்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள http://eksaar.blogspot.com/ என்ற வலை பூவைபார்க்கவும்.. (பத்துக்கு பத்து)

தமிழ் மதுரம் said...

அடங் கொய்யாலா,,, இதுக்காக எல்லாம் தேடுவாங்களோ???

Gajen said...

அடடா...ரெண்டு நாள் தான் ஆன்லைன் வரவில்லை.அதற்குள் 4-5 பதிவுகள்..அவற்றை வாசித்து பதிலிடவே இன்னொரு நாள் தேவை போலிருக்கிறது ;)

அண்ணா, டாப் 10 தேடல்கள் எல்லாமே பெண்கள்/கலையுலகம்/entertainment சம்பந்தப்பட்டதாய் உள்ளனவே(obama வை தவிர)?? இது தான் கலியுகமோ?

பி.கு-Britney முடியை shave செய்து கொண்டதை மறந்துவிட்டீர்களா?

அருண்மொழிவர்மன் said...

உயர் கல்லூரி நாட்களில் பிரிட்ணி மீத் பெரும் மோகம் இருந்தது. அதன் சிறு வயதில் வந்த அளாவுக்கு மேற்பட்ட புகழ் மற்றும் பணத்தாலும், சில பிழையான முடிவுகளாலும் இவர் தடம் மாறி போனது பெரும் சோகம். இவரது முன்னாள் காதல் ஜஸ்டின் டிம்பர்லேக் அந்நாட்களில் ஓம் என்ற பதக்கம் ஒன்றை அணிந்திருப்பார்

ARV Loshan said...

நன்றி கதியால்.. இப்ப தான் நான் ஆஸ்திரேலிய அணி பற்றிப் பதிவு போட்டேன்.. தற்செயலாக உங்கள் பதிவைப் பார்த்தால் நீங்கள் ஏற்கெனவே போட்டுள்ளீர்கள்.. நல்ல பார்வை.. ஆனால் இருவரும் வேறு வேறு முறைகளில் பார்த்துள்ளோம்.. :)

ஆதிரை.. நம்ம நமீதா (எப்பிடி எல்லாம் உரிமை எடுக்கிறோம்..) வந்தாலே சந்தோசம் தானே.. (எப்படி சமாளிப்பு?) ;)

நன்றி கருப்ப்ஸ்.. பார்த்தேன்,.. படித்தேன்..

இன்று வருகிறேன் கமல்.. உங்கள் தலைவலியை எங்களுக்குத் தர எண்ணமா? வாழ்க உங்கள் நல்லெண்ணம்

ஆமாம் சேது.. நல்லவனா இருந்த கண்டுகொள்ள மாட்டேங்கிறாங்க.. ;)

கலை.. நீங்களுமா?

சஞ்சய்.. ரொம்பத் தான் புகழுறீங்க.. ஒரே வெக்கமா இருக்கே,... ;)

என்ன கொடும சார்.. பார்த்தேனுங்கோ.. உண்மை தான்.. அது சரி எது அது பெயர போட முடியாத இணையத்தளம்? ;)

கமல்.. ஆமாங்கோய்யா.. எல்லாத்துக்கும் தேடுவாங்க.. ;)

தியாகி.. என்ன செய்வது.. எப்பவும் இவங்களுக்குத் தானே மவுசு.. ;)
ஆமா மொட்டை போட்டதை சொல்லவில்லை.. நன்றி.. மொட்டைக்கு.. ;)

அருண்மொழிவர்மன்.. நன்றி.. நாங்களும் அந்தக் கால பிரிட்னி பிரியர்கள் தான்.. ;)

Sanjai Gandhi said...

ஆஹா மை ஸ்வீட் ஹார்ட்டும் ஆல் டைம் கனவுக் கன்னியும் பட்டியலில் இருக்கிறார்கள். :)

பகிர்ந்ததற்கு நன்றி லோஷன். :)

Anonymous said...

சொல்ல முடியாது. ஏன்னா அது என்ன என்று பார்பதற்கு வயது ஆகவேண்டும் என்று சொல்கிறார்கள்.

என்ன கொடும சார்..

Anonymous said...

18 வயது

ARV Loshan said...

நன்றி சஞ்சய் காந்தி.. யார் யாரை நீங்க சொன்னேங்க என்று புரிஞ்சு போச்சி..

என்ன கொடும சார்..அப்ப நீங்க பச்சை பபா எண்டு சொல்றீங்களோ? நாங்க இப்போ சொல்லணும்.. "என்ன கொடும சார் இது.. " ;)

DG.Terence said...

உங்கள் தேடல் இன்னும் பயன்னுள்ளதாக அமையட்டும் நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner