இன்று நாக்பூர் டெஸ்ட் போட்டியின் தீர்மானம் மிக்க நாள்.இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை மட்டுமல்லாமல் தொடரின் முடிவையும், போர்டர்-கவாஸ்கர் கிண்ணம் யாரிடம் செல்லும் என்பதையும் தீர்மானிக்கும் நாள்.
இன்றைய நாளில் ஒரு சில சுவாரசியமான விடயங்கள் நடந்தன.
நான் எனது வலைத் தளத்தில் எதிர்வு கூறியது போலவே டிராவிட் இரண்டாவது இன்னிங்க்சிலும் சறுக்கினார்.
அவருக்கு இதன் பின் ஆப்பு நிச்சயம் போலவே தென்படுகிறது.
கங்குலி தனது இறுதி இன்னிங்க்சில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.Sir.டொனல்ட் பிரட்மனும் இவ்வாறே தனது இறுதி இன்னிங்சில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
டொன்னுக்கும், தாதாவுக்கும் ஒரே நிலை.. ஆனால் தாதாவின் சராசரியை விட டொன்னின் சராசரி இரு மடங்கு அதிகம்..
எழுந்து நின்று உற்சாக வரவேற்பு அளித்த நாக்பூர் ரசிகர்கள் இருக்கைகளில் அமர முதலே தாதா பவிலியன் திரும்பி விட்டார்.

முதலாவது பயிற்சி போட்டியில் சரமாரியாக வாங்கிக் கட்டிய ஜேசன் க்றேச்சா இந்தப் போட்டியில் இந்திய அணியை உருட்டி எடுத்து விட்டார்.
200 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்தாலும் முதலாவது இன்னிங்க்சில் 8 விக்கெட்டுகளையும்,இன்று 4 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை புரிந்தார்.முதலிலேயே இவரை அணியில் சேர்த்து இருக்கலாமோ என்று பொண்டிங் நிச்சயமாக ஏங்கிஇருப்பார்.
இன்று வெல்ல வேண்டிய நிலையில் இருந்த ஆஸ்திரேலியா தனது நிலையை டோனி-ஹர்பஜன் இணைப்பாட்டத்தின் போது இழந்தது. 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது இந்திய பெற்றிருந்த ஓட்டங்கள் 166 மட்டுமே.. அந்த வேளையில் லீ,வொட்சன் போன்ற வேகப்பந்து வீச்சாளரைப் பயன்படுத்தாமல் சுழல் பந்து வீச்சாளர்களையே பொண்டிங் பயன்படுத்திவந்தார்.
இதற்கான காரணம் பிறகு தான் வெளிப்பட்டு இருக்கிறது..
அதிக நேரம் எடுத்துப் பந்து வீசினார்கள் என்று போட்டித் தீர்ப்பாளர் க்ரிஸ் பிரோட்,ஆஸ்திரேலிய அணித்தலைவர் பொண்டிங்கை அழைத்து எச்சரித்திருக்கிறாராம்.
தொடர்ந்தும் அதிக நேரம் எடுத்தால் தான் டெஸ்ட் போட்டித் தடைக்கு ஆளாகவேண்டி வரும் என்றே பொண்டிங் இந்த முடிவை எடுத்தாராம்.இது ஆஸ்திரேலியா வானொலி ஒன்றில் சொல்லப் பட்ட விடயம்.
இவ்வாறான நேரத்தில் பொண்டிங் டெஸ்ட் போட்டியில் வெல்வதை கவனிக்காமல் சுயநலமாக நடந்து கொண்டது சரியா?
அல்லது இது ஒட்டுமொத்த அணியின் முடிவா என இனித் தான் ஊடக செய்திகள் சொல்லும்.
தனது சுயநலத்துக்காக ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை பொண்டிங் பணயம் வைத்திருப்பாரா? வொட்சன் மறுபடி பந்துவீச அழைக்கப்பட்டதுமே ஹர்பஜனின் விக்கெட்டைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

எனினும் டோனி,ஹர்பஜன் ஆகியோரின் அரைச் சதங்கள் ஆஸ்திரேலியா பக்கம் இருந்த வெற்றியைக் கொஞ்சமாவது இந்தியப் பக்கம் திருப்பி இருக்கின்றன.
நாளை தமது வெற்றி இலக்குக்கு எஞ்சி இருக்கும் 369 ஓட்டங்களை ஆஸ்திரேலியா பெற முயற்சிக்குமா?
இலேசில் தோல்வியடைய விரும்பாத ஆஸ்திரேலியா நிச்சயம் இறுதிவரை போராடும் என்றே நம்புகிறேன்.
வாய்ப்புக்கள் இரு அணிகளுக்குமே உண்டு..
யாருக்கு வெற்றி அல்லது சமநிலையா என்பதை நாளை நாம் ஆர்வத்துடன் அவதானிக்கலாம்..
போராட்ட குணம் உடைய அணி ஆஸ்திரேலியா.. இறுதி நேரத்தில் இந்தியா சொதப்பிய வரலாறுகளும் உண்டு..
புதிய இந்தியாவை நாளை பார்க்கலாமா அல்லது தாம் இன்னமும் வீழவில்லை என உலக சாம்பியன்கள் நிரூபிப்பார்களா?
10 comments:
ahthyt.blogspot.com
//புதிய இந்தியாவை நாளை பார்க்கலாமா அல்லது தாம் இன்னமும் வீழவில்லை என உலக சாம்பியன்கள் நிரூபிப்பார்களா?//
excellent finishing touch :)
நல்லதொரு கண்ணோட்டம்.
////புதிய இந்தியாவை நாளை பார்க்கலாமா அல்லது தாம் இன்னமும் வீழவில்லை என உலக சாம்பியன்கள் நிரூபிப்பார்களா?////
நறுக்கென்ற கருத்து.
இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியர்கள் ஒரு அணியாக போராடியதை நான் காணவில்லை, பார்ப்போம் பழைய ஆஸ்திரேலியர்களை அதாவது போராட்ட குணத்தைப் பார்க்கவியலுமா என்று!
நான் இதை எழுதும் 12.00 மணி வரை மூன்று விக்கெட்டுகளை இழுந்து ஆஸ்திரேலியா அணி 111 (நெல்சன்) ஓட்டங்களை குவித்திருக்கிறது, ஆனால் நீங்கள் சொதப்பியதாக சொன்ன அதே டிராவிட் முக்கியமான ஹய்டேன் இன் பிடியை தவற விட்டுவிட்டார், ஒரு சிறந்த இறுதி நாள் டெஸ்ட் போட்டி ஒன்றை இன்று எதிர்பார்க்கலாம், ஆல் த பெஸ்ட் இந்தியா & ஆஸ்திரேலியா
தள்ளி நிக்கும் குமப்;ளே! மாட்ட மாட்டார் வம்பிலே!
மோறச்சு பாத்தா கங்குலி! ஆகிடுவே சங்கு நீ!
நின்னு புடிக்கும் திராவிடு! போதும் இப்ப ஒடிடு!
செஞ்சுரி அடிச்சா சச்சினு- கேக்க மாட்டான் கொஸ்சினு!
-----சோவண்ணா. ஸ்ரீ
172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு மாபெரும் சாதனை என்றே சொல்லலாம்.
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
hai
நன்றி நண்பர்களே..
கங்குலியின் வெற்றிடம் அடுத்த டெஸ்ட் தொடரின் போது தெரியும்.. யார் அவருக்குப் பிரதியீடு என்பது தான் இப்போது தெரிவாளர்களுக்கு உள்ள குழப்பம்..
Post a Comment