November 03, 2008

ஏங்க வைக்கிறாய் மகனே..


                              

குறும்பு கொப்பளிக்கும் கண்கள்
குட்டியான சின்னத் தொப்பை
குழிவிழும் அப்பிள் கன்னம்
கொஞ்சமாய் வரும் கோபம்
அப்பாவா அம்மாவா என அடையாளம்
காணமுடியா
அதிசயக் கலவை
அவசரமான தவழல் நடை
அரைகுறையான எழும்பி நிற்றல்
எதையும் ஆராயத் துடிக்கும் கைகள்
கத்தாழைக் கண்ணாலே,கண்கள் இரண்டால்
தசாவதாரம் பாட்டு,குருவிக் குத்துப்பாட்டு
தாம் தூம் , ராமன் தேடிய சீதை பாடல் 
இவை எல்லாமே பிடிக்கும் வித்தியாசமான ரசனை
குளிப்பதில் மோகம்
விளையாட்டுச் சாமான் வேண்டாம்
சமையல் பாத்திரம்,மேசை,டிவி,கொம்யூட்டர் remote தான்
வேண்டுமெனும் வித்தியாசமான விருப்பங்கள்
எப்போது பேசுவான் என எங்களை
எதிர்பார்த்து வைத்திருக்கும் காத்திருப்பு
எந்த நோவும் தாங்கும் அதிசயம்
கமராவுக்குப் போஸ் கொடுக்கும் எதிர்கால ஹீரோ
வெளியிடம் போனால் சிரமம் தரா பெரிய மனுஷத்தன்மை
டிவியில் விளம்பரம் மட்டும் பார்க்கும் ரசனை
வேலைமுடிந்து நான் வந்தால் வரவேற்கும் மகிழ்ச்சி
வாகனம் தனில் பயணம்
செய்யும் பரவசம்
பேப்பர் புத்தகம் கிழிக்கும் அவசரம்
கையில் கிடைக்கும் சிறு பொருள் எடுத்து
வாயில் போட்டு நாம் பார்க்கிறோமா என்று
அவதானிக்கும் கள்ளத்தனம்
fridge திறந்து குளிர் வாங்கும் குஷி
இப்போதே தான் அப்பா,அம்மா என உரிமை கோருகின்ற பாங்கு..
எப்போதும் எனக்கும் இது போல அப்பாவித் தனமான
கவலை அற்ற பிஞ்சு மனம் வாய்த்திருக்கக் கூடாதா என ங்க வைக்கிறாய் மகனே..

                    


 

6 comments:

தபோதரன் said...

அடடே உங்கள் மகனுக்கு அதற்குள் ஒரு வயது வந்துவிட்டதா

நேற்றுத்தான் சந்துருவும் விமலும் உங்கள் திருமணத்தன்று டயருக்குள் காற்றைப் போல மாட்டிக்கொள்ளமாட்டேன் என்று சூரியனில் உங்களைக் கிண்டலடித்து பட்டுப் போட்டது போலிருக்கு

இரண்டு வருடங்கள் பறந்து போய்விட்டன

மகனுக்குப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தபோதரன்
ஸ்வீடன்

Anonymous said...

hai anna, nice pic and poem.

"நேற்றுத்தான் சந்துருவும் விமலும் உங்கள் திருமணத்தன்று டயருக்குள் காற்றைப் போல மாட்டிக்கொள்ளமாட்டேன் என்று சூரியனில் உங்களைக் கிண்டலடித்து பட்டுப் போட்டது போலிருக்கு"

how is life now????...........

Abiman said...

Cute son. GOD BLESS..

NiMaL said...

மகன் இப்பவே றேடியோ பக்கமாதான் போறார் (படத்தில)... :)

ஹர்ஷஹாசனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

சாந்தி said...

உங்கள் கண்ணனுக்கு எங்களது வாழ்த்துக்கள் லோஷன்.

குழந்தைகளின் உலகமே தனித்துவதானதுதான். வாய் திறந்து பேசும் போது ஓர் உலகம் வளர்ந்து பள்ளி செல்லும் போது ஓர் உலகம் அவர்கள் வளர்ச்சியில் புலர்வது புதியதோர் உலகாககும்.

குழலினிது யாழினுது என குழந்தையின் வாயுரைக்கும் போது குழலும் யாழும் தோற்றுவிடும்.

- சாந்தி -

மாயா said...

// நேற்றுத்தான் சந்துருவும் விமலும் உங்கள் திருமணத்தன்று டயருக்குள் காற்றைப் போல மாட்டிக்கொள்ளமாட்டேன் என்று சூரியனில் உங்களைக் கிண்டலடித்து பட்டுப் போட்டது போலிருக்கு . . . //

உங்கள் சின்னக்கண்ணணுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified