உலகில் ஒவ்வொரு நாளும் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு விபத்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு விபத்துமே இழப்புக்களைத் தருபவை.அந்த இழப்புக்களின் பாதிப்புக்கள் சம்பந்தப் பட்டவர்களுக்கே உணரக்கூடிய வலிகளைத் தருகின்றன.
விபத்துக்கு வரைவிலக்கணப்படி பார்த்தால் இழப்பு,காயம்,பாதிப்பு,நஷ்டங்களை ஏற்படுத்துகின்ற விரும்பத்தகாத,துரதிர்ஷ்டவசமான திடீர் நிகழ்வு என்று சொல்லலாம்.
விபத்துகளில் இழக்கப்படும் ஒவ்வொரு உயிருமே விலை மதிக்க முடியாதவை. உலக சரித்திரத்திலே உயிர்களை அதிகளவில் பலி கொண்ட பல விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும், பணப் பெறுமதி அடிப்படையில் அதிக பொருள் சேதத்தை ஏற்படுத்திய மாபெரும் விபத்துகளையே ($) கீழே வரிசைப் படுத்தியிருக்கிறேன்.
இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, போர் அல்லது தீவிரவாத நடவடிக்கை காரணமாக நிகழ்ந்த எந்த ஒரு அழிவும் இங்கு குறிப்பிடப் படவில்லை.
#10. Titanic - $150 Million
டைட்டனிக் கப்பல் விபத்து
டைட்டனிக் திரைப்படம் மூலமாக உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கப்பல் விபத்து 1912ஆம் ஆண்டு இடம்பெற்றது.கட்டி முடித்த போது உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகக் கருதப்பட்ட டைடானிக் தனது வெள்ளோட்டத்திலேயே பனிப்பாறையுடன் மோதுண்டு கடலுள் சங்கமமானது. 1500 பயணிகளையும் பலியெடுத்த டைடானிக் கட்டி முடிக்க ஏற்பட்ட மொத்த செலவு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அப்போதே செலவானது.. இப்போதைய மதிப்பில் சுமார் 150 மில்லியன் டொலர்கள்.
#9.Wiehltal Bridge -$358 Million
வீல்ட்ஹால் விபத்து
ஜெர்மனியில் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வீல்ட்ஹால் பாலத்தின் மீது 32000 லிட்டர் எரிபொருள் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி ஒன்றுடன் கார் ஒன்று மோதியது.90 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே ஆட்டோ பான் என்று அழைக்கப்படும் பிரதான பாதையில் வீழ்ந்த எரிபொருள் தாங்கி தீப்பிடித்து எரிந்தது.அந்த வெப்பம் தாங்கமுடியாமல் பாலமும் வெடித்தது.தற்காலிகமாகப் பாலத்தைத் திருத்த ஆனா செலவு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.மீளப் பாலம் கட்ட ஆன செலவு 318 மில்லியன் டொலர்கள்.

#8. MetroLink Crash - $500 Million
மெட்ரோ லிங்க் விபத்து
அமெரிக்காவின் கலிபோர்நியாவில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 இல் இடம்பெற்ற மிகக் கோரமான தொடருந்து விபத்து இது. லொஸ் அன்ஜெலிஸ் தொடருந்து நிலையத்தில் எதிரும் புதிருமாக இரண்டு தொடருந்துகள் (அது தான் ரயில்கள்) மிக வேகமாக மோதிக்கொண்டதில் 15 பேர் பரிதாபமாகப் பலியாயினர்.மெட்ரோ லிங்க் தொடருந்து வந்த பொழுது அதை நிறுத்தும் சமிக்ஞ்சை வழங்க வேண்டிய அதிகாரி sms அனுப்புவதில் பிஸியாக இருந்தாராம். உயிர்களின் நஷ்ட ஈடு,பொருள் இழப்பு எல்லாம் சேர்த்து இழப்பு 500 மில்லியன் டொலர்கள்.

#7. B-2 Bomber Crash - $1.4 Billion
B2 பொம்பர்கள் விபத்து
குவாமில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து மேலெழுந்த அமெரிக்க விமானப்படையின் B2 குண்டுவீச்சு விமானம் சமிக்ஞ்சை கோளாறு காரணமாக தலை குப்புறமாக வீழ்ந்து 1.4 பில்லியன் டாலர்களைக் கரியாக்கியது.இதுவரைக்கும் மிக அதிக இழப்பான விமான விபத்தாக இதுவே கருதப்படுகிறது. எனினும் விமானிகள் இருவருமே வெளியே பரஷுட்டில் பாய்ந்து உயிர் தப்பிக் கொண்டனர்.


#6. Exxon Valdez -$2.5 Billion
எக்சன் வல்டஸ் எண்ணைக் கசிவு
அமெரிக்காவின் அலாஸ்கா பிராந்தியத்தில் எக்சன் நிறுவனத்துக்கு சொந்தமான வல்டஸ் கப்பல் பவளப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் 10.8 மில்லியன் கலன் எண்ணெய் கடலோடு கலந்து வீணாகியது. இது நடந்தது 1989 ஆம் ஆண்டு. எண்ணெய்க் கழிவுகளை சுத்திகரிக்க ஆன செலவு மட்டும் 2.5 பில்லியன் டொலர்.

#5. Piper Alpha Oil Rig - $3.4 Billion
பைபர் அல்பா எண்ணெய்க் கிணறு விபத்து
1988 இல் ஜூலை மாதம் ஆறாம் திகதி இங்கிலாந்துக்கு சொந்தமான வட கடலில் அமைந்திருந்தன பைபர் எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து முழு எண்ணெய்க் கிணற்றுத் தளத்தையும் எரித்து நாசமாக்கியது. இரண்டு மணித்தியாலங்களில் 16 தொழிலாளர்கள் பலியானதோடு 300 கோபுரங்கள்,100 பாரிய எண்ணெய்க் குழாய்கள் என்று அனைத்துமே சாம்பராயின.அந்தக் காலகட்டத்தில் அதிக எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய பைபர் முழுவதுமாக இல்லாது போயிற்று.மொத்த இழப்பு 3.4 பில்லியன் டொலர்கள்.
#4. Challenger Explosion - $5.5 Billion
சலேன்ஜர் விண் விபத்து
அமெரிக்காவினால் 1986 ஆம் ஆண்டு ஏவப்பட்ட சல்லேன்ஜர் விண்கலம் விண்ணில் எழுந்து 73 வினாடிகளில் வெடித்து சிதறியது.ஒரு சிறிய தொழிநுட்பக் கோளாறு தான் இதற்கான காரணம் எனினும்,ஆன செலவோ மொத்தம் 5.5 பில்லியன் டொலர்கள்.

#3. Prestige Oil Spill -$12 Billion
ப்ரெஸ்டீஜ் எண்ணெய்க் கசிவு
கிரேக்க நாட்டுக்கு சொந்தமான ப்ரெஸ்டீஜ் என்ற எண்ணெய்க் கப்பல் ஸ்பானிய,பிரெஞ்சு கடற்கரையோரமாக 2002 ஆம் ஆண்டு நவெம்பர் 13 ஆம் திகதி பயணம் மேற்கொண்டிருந்தவேளையில் சந்தித்த மாபெரும் புயல் காற்றே இந்த மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்துக்குக் காரணம்.
77000 தொன்கள் கொண்ட எண்ணெய்த் தாங்கிகளை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலைப் புயல் தாக்கியதும் சில தாங்கிகள் வெடித்து சிதறின.
உடனடியாக கப்பல் தலைவன்,முதலில் ஸ்பானிய கடற்படையிடமும்,பின்னர் பிரெஞ்சு,போர்த்துக்கல் கடற்படையிடமும் உதவி கோரி கோரிக்கை விடுத்தபோதும்,கரையொதுங்க அனுமதி கேட்டபோதும் மறுக்கப்படவே செய்வதறியாமல் திகைத்துப்போன கப்பல் தலைவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. இந்த மூன்று நாடுகளுமே கப்பலைத் தங்கள் கரையோரம் ஒதுங்க வேண்டாம் என்று விரட்டின. நடுக்கடலில் கடும் புயலில் மாட்டிக்கொண்ட கப்பலைப் புயல் இரண்டாகப் பிளந்தது. இருபது மில்லியன் கலன் எண்ணெய் கடலிலே வீணாகியது.
இதன் காரணமாக பிரான்ஸ்,ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பல்லாயிரக் கணக்கான மைல்கள் நீளமான கடற்கரைகள் மாசடைந்து போயின.
சேதாரங்களும்,சுத்திகரிப்புப் பணிகளுக்கும் ஆன மொத்த செலவு 12 பில்லியன் டொலர்கள்.
#2. Space Shuttle Columbia - $13 Billion
கொலம்பியா விண்கல விபத்து
1978 ஆம் ஆண்டில் ஆரம்பமான கொலம்பியா விண்கலக் கட்டுமானப் பணிகளின் மூலம் அமெரிக்கா உலகின் தலை சிறந்த விண்கலத்தை அமைத்த பெருமையை அடைந்தது.
25 ஆண்டுகள் நீடித்த அந்த பெருமை, 2003 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதலாம் திகதி டெக்சாஸ் மாத்தின் வான் பரப்பில் நிகழ்ந்த கொடூர விபத்தோடு இல்லாமல் போயிற்று.
விண்கலத்தின் இறக்கைகள் ஒன்றில் ஏற்பட்ட சிறுதுவாரம் பேரு விபத்தை ஏற்படுத்தியது.
விண்கலத்தில் என் துவாரம் ஏற்பட்டது என்று ஆராயவே 500 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன. மீள் கட்டுமானப் பணிகளுக்கு மேலுமொரு 300 மில்லியன் டொலர்கள்.
மொத்த இழப்பு மட்டும் 13 பில்லியன் டொலர்கள்.

#1. Chernobyl - $200 Billion
செர்னோபில் அணு உலை விபத்து
1986 ஆம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்து தான் உலகில் யுத்தங்கள் இல்லாமல் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய சம்பவம். வரலாற்றில் கறை படிந்த நாளாகிப் போன ஏப்ரல் 26,1986 - அன்று தான் அப்போதைய சோவியத் யூனியனின் உக்ரைனில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவு மிக நீண்ட காலம் நீடிக்கக்கூடிய அழிவுகளைத் தந்தது.
பலவருடம் கழித்து புற்று நோயினாலும் பலியானோரோடு சேர்த்து 125000.உக்ரைனின் அரைவாசிப் பிரதேசம் அணுக்கசிவின் காரணமாக இன்றுவரை பாதிக்கப் பட்டுள்ளது.இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேறிடங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவரானார்கள்.1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்றுவரை கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் சேர்த்து இழப்பு வேறெந்த விபத்துமே நெருங்க முடியாத 200 பில்லியன் டொலர்கள்.

^^^^****^^^^
இனிமேலுமாவது இந்த விபத்துக்களை வேறெந்த விபத்துகளும் இழப்பு எண்ணிக்கையிலோ,பிரம்மாண்டதிலோ முந்தக் கூடாது என்று எண்ணுவோமாக..
14 comments:
தூள் லோஷன்..
நிறைய புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.. எனக்குத் தெரிந்த விபத்துக்கள் அதிகம் இருந்தாலும், தெரியாதவைகளும் இருந்தன.. அறிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..
வாழ்க வளமுடன்
லோஷன், அரிய விபத்துகள் பற்றிய செய்திகளை படங்களுடன் விவரித்ததற்கு நன்றி.
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//தூள் லோஷன்..//
அண்ணே கஞ்சா கருப்பு மாதிரி இதுவும் பட்டப் பெயரா :)
கண்டிப்பா வரும். கூடங்குளம் தொழில் நுட்பம் செர்னோபில் மாதிரியே. இங்கு பார நீரும்(D2O) இரண்டடுக்கு கொங்கிரீட்டும். அவ்வளவும் தான்.
செர்னோபில் சம்பவத்துக்கு காரணம் ஒன்றுமேயில்லை, ஆராய்ச்சி தான். விபத்தல்ல.
Excellent Anna.
வணக்கம் லோசன் அண்ணா!
எப்படிச் சுகமாய் இருக்கிறீங்களோ???றேடியோஸ்பதி பிரபா அண்ணா, சாரல் தூவும் நம்ம சயந்தன் அண்ணா, சிநேகிதி அக்கா, பண்டைத்தமிழ் மொழி பெயர்க்கும் வசந்தன் அண்ணை, சோமி அண்ணாவிற்குப் பிறகு நாமளும் குரல் பதிவு தொடங்கிட்டமில்ல?????
குரல் பதிவைக் கேட்க கீழே சொடுக்கவும்.
நலமாக இருக்கிறீர்களா?
சூப்பர்சோனிக் விமான விபத்தை விட்டுட்டீங்க போல இருக்குது.தெரிந்தே ஏற்படுத்திய நாகசாகி,ஹிரொசிமாவையும் சேர்த்துக்குங்க:( கூடவே உங்க ஊரையும்.
அருமையான தொகுப்பு..
புதிய பல தகவல்கள்,விஜயகாந்து போல் புள்ளிவிவரத்தோடு கொடுத்து இருக்கீங்க:)
நன்றிகள் எல்லோருக்கும்..
ஆகா தூள் லோஷன்? காவடி தூக்க வச்சிட்டிங்களே.. ;)
ராஜநாராயணன்,
சூப்பர் சொனிக் சேதம் அவ்வளவு பெரிதல்ல என்று நினைக்கிறேன்..
ஆரம்பத்திலேயே யுத்தம்,மற்றும் தெரிந்து ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் செர்த்துக்கொள்ளப்படா என்று சொல்லிவிட்டேன்.. (தப்பித்தேன்)
ஆட்காட்டி.. ஆமாம்.. மனிதர்களின் சிறு கவலையீனங்கள் தான் பெரிய அழிவுகளை உருவாக்குகின்றன.
ஆகா குசும்பரே.. இங்கேயுமா? எப்பிடியா உங்களலால மட்டும் முடியுது? உக்காந்து யோசிப்பீங்களோ?
அதெல்லாம் சரிண்ணே எங்க போபால் விஷவாயு பத்தி ஒண்ணும் கானோமே!
// சுனா பாணா said...
அதெல்லாம் சரிண்ணே எங்க போபால் விஷவாயு பத்தி ஒண்ணும் கானோமே!//
அன்பின் லோஷன், ஆமாம்.போபால் விஷவாயு பற்றிய விவரங்களை காணவில்லை. ஆனால் இந்த அனைத்து விபத்துகளுக்கும் இடையேயான ஒற்றுமை என்னவென்றால் இவையனைத்தும் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட, அதில் மனிதர்களின் அஜாக்கிரதையால் அல்லது ஒரு சில மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தையால் ஏற்ப்பட்டவைகளாகும்.
ஆனால் இயற்கையாக ஏற்படும் பேராபத்துகளில் இருந்து உயிருள்ளவைகளை காக்க வாய்ப்பு இருந்தும் ஒரு சில மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தையால் பெரும் உயிரிழப்புகள் ஏற்ப்பட்டதை மறக்கவியலாது. உதாரணம் : 2004-ல் ஏற்ப்பட்ட கடற்கோள்/ஆழிப்பேரலை (சுனாமி-Tsunami)குறித்த தகவலை முன்னரே ஒரு சிலர் அறிந்தும் (நானும் இதில் சேர்த்தி தான்) அதை சரியான நேரத்தில், சரியான நபர்களிடத்தே கொண்டு சேர்க்க தவறியதால் ஏற்ப்பட்ட பாரிய உயிரிழப்பை நினைவில் கொள்ளலாம். அந்த குற்ற உணர்ச்சியால் தான் இந்த "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" (http://www.ina.in/itws/) யை இது வரை நடத்தி வருகின்றோம்.
மேலும் ஆழிப்பேரலை குறித்து யாரும் பெரும் கிலி கொள்ள தேவையில்லை. அதனால் கடற்கரையின் இருபுறமும் அதிகபட்சமாக 2 கி.மீ வரை தான் சேதத்தினை ஏற்ப்படுத்திட இயலும்.நாம் ஆழிப்பேரலையை முன்கூட்டியே கணித்து அதைப்பற்றிய விவரத்தை சரியான நேரத்தில், சரியான நபர்களிடத்தே கொண்டு சேர்த்து விட்டால் ஏகப்பட்ட உயிர்களை காப்பற்றிவிடலாம். மேலும் இலங்கை, இந்திய மீனவர்களிடம் இதை சேர்த்துவிட்டால் அவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை இயக்கி ஆழிப்பேரலை வருவதற்க்குமுன் கடலுக்குள் சென்றுவிடலாம்.கடலில் அவர்கள் 2கி.மீ தூரம் தாண்டிவிட்டால் பயமில்லை.இதனால் பெருமளவில் உயிர் மற்றும் பொருள் சேதத்தினை தவிர்த்திடலாம். இந்த விஷயம் நிறைய பேர்களுக்கு தெரியாது. காரணம் இந்தேனேஷியாவில் பாரிய பூகம்பம் ஏற்ப்பட்டு ஏறத்தாழ 2 மணி நேரம் கழித்தே ஆழிப்பேரலை இலங்கை மற்றும் இந்திய கடற்கரைகளை தாக்கியது. சரியான நேரத்தில் தகவல்கள் பகிரப்பட்டு இருந்தால் சேத அளவு கணிசமாக குறைந்து இருக்கும். இனிவரும் காலங்களில் இதை நாமனைவரும் செயல் படுத்துவோம்.
வேண்டுகோள் - http://thesamnet.co.uk/?p=3637 - மீன்களின் நடத்தையை ஆய்வு செய்வது அவசியம்! இந்த தகவல் உண்மையானதா ? இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் தயைகூர்ந்து இதைப்பற்றி விசாரித்து எனக்கு தகவல் தரவும். என்னுடைய வலைப்பதிவிலும் இதைப்பற்றி பதிந்துள்ளேன். http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html- மீண்டுமொரு சுனாமி ?
with care and love,
Muhammad Ismail .H, PHD,
அருமை.. அருமை. இன்னும் ஏதேனும் டாப் 10 உண்டா?
நன்றி சூனா.பானா., நன்றி இஸ்மாயில்,நன்றி ஆ இதழ்கள்..
போபால் விஷ வாயு விபத்து சேதம் இவற்றோடு ஒப்பிடும் பொது குறைவு தான் போலும்..
இஸ்மாயில் நீங்கள் நல்ல முயற்சி ஒன்றை முன்னெடுக்கிறீர்கள்.. முடிந்தளவு தேடி எடுத்து அனுப்புகிறேன்..
ஆ, கிடைப்பவற்றுள் பிரயோசனமானவற்றைப் பகிர்ந்து கொள்வேன்..
Post a Comment