November 08, 2008

பிசாசின் நீச்சல் குளம்இந்தப் பிசாசு நீச்சல் குளத்தில் நீந்த துணிச்சல் இருக்கா உங்களிடம்?


பார்க்கும் போதே மயிர்க் கூச்செறியச் செய்யும் இந்த உயரமான நீச்சல் குளம் அமைந்திருப்பது ஒரு நீர் வீழ்ச்சியில்.

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள விக்டோரியா நீர் வீழ்ச்சி 128 மீட்டர் உயரமானது..

பார்க்கும் போதே பயங்கரமான இந்த நீர்வீழ்ச்சித் தடாகப் பகுதி பிசாசின் நீச்சல் குளம் (The Devil's swimming pool) என்று அழைக்கப்படுகிறது.. அந்த உயரமான,அழகான நீர்வீழ்ச்சியில் அமைந்துள்ள தடாகம் போன்ற இந்த இடத்தில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான மாத காலப் பகுதியில் மக்கள் பயமில்லாமல் நீந்தலாம் என்று சொல்லப் படுகிறது..அந்தக் கால கட்டத்தில் நீர்வீழ்ச்சியில் நீரோட்டம் குறைவாக இருப்பதே காரணம்..
ஆனால் அப்படியும் தவறி வீழ்ந்தால்?????

நீந்த விரும்பினால் நீந்தலாம் ஆனால் இப்படியெல்லாம் கரணம் தப்பினால் மரணம் என்று நீந்த வேணுமா ???

இப்படியான திரில்லான அனுபவங்களுக்காகவே வருடம் தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்களாம்.

எனினும் அண்மைக்கால ஜிம்பாப்வே பிரச்சினைகளால் சுற்றுலாப் பயணிகளின் வரவு வீழ்ச்சி கண்டுள்ளதாகக் கூறப் படுகிறது..

12 comments:

Anonymous said...

neer veelichchi enru eluthaamal aruvi enru alaiyungal

தீனா கோபி, said...

வலைப்பதிவர் லோஷன் படம் நடிக்கப்போறார்...... intha thakaval unmaiya?????

ஆட்காட்டி said...

சும்மா ஆளை விடுங்க. சும்மா வெள்ளத்திலேயே விழுந்திருவன்.

LOSHAN said...

அருவி என்பதும் அழகே.. நீர்வீழ்ச்சியில் பலமும்,அருவியில் அழகும் இருக்கிறது.. சரியா?

ஆகா.. கிளம்பிட்டாங்கையா.. வதந்திகளை நம்பாதீர்கள்.. என் நல்லா இருக்கிறது பிடிக்கலையா?

(அது சரி யாரு ஹீரோயின்?);)

ச.இலங்கேஸ்வரன் said...

ம் நல்ல தரமான வித்தியாசமான பதிவுகளை இட்டு வருகின்ற லோசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Aruna said...

அம்மாடியோ....பார்த்தாலே நடுங்குது.
அழகாவும் இருக்கு...
அன்புடன் அருணா

Anonymous said...

whats the name of this hollywood movie?

RAMASUBARAMANIAM said...

EVEN IN TAMI NADU WE HAVE SUCH A FALLS IN PODHIGAIMALAI CHARAL, NEAR PAPANASAM, THIRUNELVELI DISTRICT...LOWER CAMP IS AGASTHIYAR FALLS & THE UPPER CAMP IS KARAYAR DAM WHICH IS ONE OF THE RISKIEST FALLS...HOPE MANY PEOPLE MUST HAVE VISITED THERE, WHICH IS KNOWN US "PANA THEERTHAM"...THERE IS A OLD SAYING IN TAMIL WHICH GOES LIKE THIS " VAZHNALAI KODUTHU PANA THEERTHAMADU"...IT IS REALLY TRUE FOR PROOF MANY STORIES ARE AVAILABLE& I THING ONE IS STILL COMING IN ANANDA VIKADAN...I DO NOT REMEMBER THE NAME OF STORY...PL REFER IF TIME PERMITS.

சயந்தன் said...

அழகாயிருக்கிறது அதனால் பயம்மாயிருக்கிறது

Dr. சாரதி said...

தலை சுற்றுது ..............

IRSHATH said...

இது மாதிரி இயற்கையான மலையில் அமைந்த நீர்வீழ்ச்சியும் மற்றும் தடாகம் போன்ற அமைப்பும் ரத்தினபுரி இல் இருந்து சிறிது தூரத்தில் பிரதான பாதைக்கு அருகாமைல் மரங்களால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ரம்மியமான அதிகம் பேருக்கு தெரியாத இடம்

இர்ஷாத்

Anonymous said...

ஏன் இந்த விபரீத விளையாட்டு...வேறு இடமா நீருடன் இல்லை....

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified