இன்னும் என் தலைவலி போகவில்லை.. இன்றும் பல பதிவுகள், பல பின்னூட்டங்கள் பார்த்தேன்.. கேட்ட கேள்வி,முன்வைத்த கருத்து ஏதோ.. அதற்கு பதிலை வித்தியாசமாக சொல்கிறேன் என்று வெட்டித் தனமாக,வெங்காயத் தனமாக,முகம் காட்ட மறுத்து அனானியாக பலர் பதில் சொல்லும்போது சிரிப்பும்,தலைவலியும் சேர்ந்து வருகிறது...
உதாரணமாக இலங்கை விஷயத்தில் இந்தியாவின் தலையீடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு வந்துள்ள சில பதில்கள்..நானும் பின்னூட்டம் போடலாம் என்று போனால் சிலர் அனானிகள் பெயரில் நடத்தியுள்ள விஷமம் பார்த்து வெறுத்துத் திரும்பி விட்டேன்.. வேணாம்டா சாமி....
அதையெல்லாம் நண்பர்கள் கொளுவி,கிரிஷ்ணா போன்றோர் பார்த்துக் கொள்ளட்டும்.. முடிந்தால் என் குழப்பங்கள்,தலைவலி குறைந்தால் நாளை ஒரு கை பார்க்கலாம்..
அதுதான் கொஞ்சம் relaxஆக இந்தப் புகைப்படங்கள்.. அது சரி எங்களுக்குrelax.விழுந்து பார்த்தால் தெரியும்..;)
ஆனால் இந்தப் பதிவின் தலைப்பிலோ படங்களிலோ ஏதாவது அரசியல் விவகாரம் பின்னணியில் உள்ளது என்று யாராவது யோசித்தால் நான் பொறுப்பாளி அல்ல.. ;)
3 comments:
அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.
veerargal ok.. appo veeraanganaikal? lolzzzzzzz
அண்ணா முஸ்லீம் காங்கிரெஸ் தலைவர் சொன்ன கருத்துக்கு எதிரான கருத்து படித்தேன். அது உங்களின் தனிப்பட்ட கருத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறதே தவிர நடுநிலை ஆனதாக இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் கூட முஸ்லிம்கள் தனித்துவமாகவே இருகிறார்கள். சில புகழ் விரும்பிகள் தவிர. அவர்கள் எதுவும் செய்வார்கள் புகழுக்காக! மற்றபடி அவர்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்பது அவ்வளவாக தெரியாது. அவர்கள் சமூக பிரக்ஞ்சை உள்ளவர்களா? வெறும் அரசியல் சினிமா வியாபாரிகள். அதோடு இந்தியாவில் உள்ள இறுக்கமான ஊடக கட்டமைப்பு இந்திய முஸ்லிம்களின் உண்மை செய்திகளை சொல்வதில்லை. ஏற்கெனவே கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சொல்லொணா கொடுமைகளை அனுபவிப்பதை நீங்கள் சர்வதேச ஊடகாங்களின் வாயிலாக அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
இர்ஷாத்
Post a Comment