October 21, 2008

அட்டைப் படத்தில் நான்!

இந்த மாத ஆரம்பத்துடன் நான் ஒலிபரப்புத் துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆவது பற்றி நான் ஏற்கெனவே பதிவிட்டு இருந்தேன்.. எனினும் நாளாந்தம் நடக்கின்ற புது,புது நிகழ்வுகளை எழுதிக் கிழிப்பதால் என்னால் ஆண்டுகள் பத்து பகுதி-மூன்றை இன்னும் தொடர முடியவில்லை (வெகு விரைவில் வரும்)

எனது இந்த சின்ன எல்லை கடப்பை (landmark) பாராட்டியும் எனது வெற்றிக் குழுவினரின் முகங்களை நேயர்களுக்கு காட்டும் முகமாகவும் இந்த வார இசையுலகம் சஞ்சிகை எனது புகைப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு கௌரவித்துள்ளார்கள்.

இசையுலகம் - இலங்கையில் இருந்து வெளிவருகிற ஒரு முற்று முழுதான இசை,பாடல்கள்.சங்கீதம் பற்றிய ஒரு அருமையான சஞ்சிகை.. (மாதம் இரு தடவை) நல்ல ஒரு நேயராக இருந்து,சிறப்பான ஒலி,ஒளி விமர்சகராகவும்,சிறப்பான ஊடகவியலாளராகவும் விளங்கும் மதன் தான் ஆசிரியர்.என்னுடைய நல்ல நண்பரும் கூட.

துணிச்சலாக என்னுடைய படத்தை அட்டையில் போட்டதே ஒரு பெரிய விஷயம் (எத்தனை பிரதி விற்றுத் தீர்ந்ததோ என்று கேட்கணும்) ;)

நடுப் பக்கங்களில் என்னுடைய சிறு பேட்டியும்,எம் வெற்றிக் குழு அங்கத்தவர்களின் புகைப்படங்களும்..

வெற்றி FM ஆரம்பித்து முதல் தடவையாக எல்லோருடைய படங்களையும் வெளியிட்டிருக்கிறோம்..எத்தனை பேர் மூர்ச்சை ஆனார்களோ? ;)

ரொம்ப அழகா இருக்கிறேன் என்று பல அழைப்புகளும்(உண்மையா தான் சொல்றேன்),பார்த்தோம் என்று ஒரு சில மடல்களும் வந்தன.. (இது வரைக்கும் எந்த அம்மாவும் என் பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்க உங்கள் படம் உதவுகிறது என்று சொல்லவில்லை என்பதே மகிழ்ச்சியானது)

மதனுக்கும்,அழகாக செய்து வடிவமைத்த நண்பர் நிசாகுலனுக்கும் நன்றிகள்.. (நம்மையெல்லாம் இருப்பதை விட இன்னும் கொஞ்சம் அழகா ஆக்கி இருக்கலாம்.. பரவால்ல அடுத்த முறை ;) )

அப்போ நானும் ஒரு model ஆகிட்டேனே.. யாராவது உங்க விளம்பரங்களுக்கு என்னை நாடுவதாக இருந்தால் என் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். (கொஞ்சம் ஓவரோ?)


அட்டைப்படம்

நடுப்பக்கம்

33 comments:

மாயா said...

வாழ்த்துக்கள் !

Subi Sundar said...

வீரகேசரியில் "இசையுலகம்" சஞ்சிகைக்கான விளம்பரத்தில் பார்த்தேன்.. முன்னர் உங்கட பதிவில பார்த்துத் தான் அப்பிடியொரு சஞ்சிகை வருவதே தெரியும்..


//(நம்மையெல்லாம் இருப்பதை விட இன்னும் கொஞ்சம் அழகா ஆக்கி இருக்கலாம்.. பரவால்ல அடுத்த முறை ;) )//

முடியல சாமி.. இந்த முறை சகிச்சுக்கிட்டதே பெரிய விஷயம்.. :)

நடுப்பக்கம் தெளிவாக வாசிக்க முடியல... நான் வாசிச்சிட்டன் பூதக்கண்ணாடி வைச்சு.. (இந்த முறை கொழும்பு புத்தகக் கண்காட்சியில் வாங்கினது.. இதுக்காவது உபயோகப்பட்டுதே... )

பூதக்கண்ணாடி இல்லாதவங்க வாசிக்கக்கூடிய மாதிரி தெளிவான படம் போடுங்க..

NiMaL said...

வாழ்த்துக்கள் அண்ணா...

//(எத்தனை பிரதி விற்றுத் தீர்ந்ததோ என்று கேட்கணும்) ;)//

உங்கட படத்த போட்டதாலேயே விற்பனை 2 மடங்காகியிருக்கும்... :)

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் லோஷன்
சிலரது வீட்டின் முகப்பில் அட்டைப்படம் இருக்கிறதாக வெள்ளவத்தைச் செய்திகள் தெரிவிக்கின்றன. (ஹிஹிஹி).

இராகலை - கலை said...

நான் இதுவரை காலமும் இசை உலகம் சஞ்சிகை வாங்கி படித்ததேயில்லை (பாடசாலை போயே ஒழுங்கா படிக்கல.....)
வீரகேசரி பத்திரிக்கையில் இசை உலகம் சஞ்சிகையின் விளம்பரத்த பார்த்தவுடனே தேடி அலைந்து சஞ்சிகைய வாங்கிவிட்டே லோஷன் அண்ணா இம்முறை வசூலில் சாதனை படைக்கும் இசை உலகம்.... நாம் என்றென்றும் உஙகளுடன்

ஆதிரை said...

வாழ்த்துக்கள் அண்ணா.

NewBee said...

வாழ்த்துகள் :)

த.அகிலன் said...

//அப்போ நானும் ஒரு model ஆகிட்டேனே.. யாராவது உங்க விளம்பரங்களுக்கு என்னை நாடுவதாக இருந்தால் என் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். (கொஞ்சம் ஓவரோ?)//

ம் ம்

Anonymous said...

வாழ்த்துகள் :)

'டொன்' லீ said...

வாழ்த்துகள்..!

கானா பிரபா said...

அட்டைப்படம் எடுக்காமல் இந்தப் புத்தகததை வாங்க வசதி இருக்கா?

சும்மா ;‍)

SurveySan said...

Gana prabha kelvikku badhil irundhaa sollunga ;)

congrats!

divya said...

Nice!

கிரி said...

வாழ்த்துக்கள்

LOSHAN said...

நன்றிகள் வந்து பார்த்து பின்னூட்டம் போட்ட எல்லோருக்கும்!
(பயங்கரமா இல்ல இருக்கு!)

வந்தி, வரவேற்க என் படம் பயன்படுகிறது என்று சந்தோஷம் தான் ! ;)

சுபி.. கண்களுக்கு சுலுக்கு எடுக்கும் ஒரு சின்ன முயற்சி!

அண்ணே பிரபா அண்ணே.. கேட்டுப் பார்த்தேன்..ஒரு சஞ்சிகை அட்டை இல்லாமல் வாங்கினால் இரண்டு அட்டைகள் இலவசமாம். பரவாய் இல்லையா?

நான் ஆதவன் said...

அட்டைப் படம் சூப்பர்... ஆனா நடுப்பக்கத்தை தான் வாசிக்க முடியல...
வாழ்த்துக்கள்

www.tamil24.blogspot.com said...

ஒரு ஊடகத்தக்குள் பத்தாண்டு இருப்பு என்பது சாதனைதான். உள்ளுக்குள் எப்போதுமே இருக்கும் காலைவாருதல் இல்லாது போனால் கள்ளப்பெட்டிசம் போட்டு தூருதல் என்பது நடைமுறை. ஆனால் அதையும் தாண்டி நீங்கள் நீடிப்பது நிச்சயம் நல்ல பொறுமைசாலியென்பதை உணர்விக்கிறது.
வாழ்த்துக்கள்.

- சாந்தி -

www.tamil24.blogspot.com said...

"அட்டைப்படம் எடுக்காமல் இந்தப் புத்தகததை வாங்க வசதி இருக்கா?"
இப்படி சொன்னவர் கானா பிரபா.

என்ன பிரபா நக்கலா ?

ஒஸ்ரேலியாவில எங்கையாவது இப்படியான சஞ்சிகை வந்தா அங்கை வாற (உங்கள்) அட்டைப்படத்தை ரசிகர் மன்றம் வைத்து வாங்க வைக்கலாம் யோசிக்காதையுங்கோ.

கார்க்கி said...

வாழ்த்துகள் சகா

LOSHAN said...

நான் ஆதவன்.. முடிந்தால் அதைப் பெரிதாகத் தர முயற்சிக்கிறேன்..

நன்றி சாந்தி, நன்றாகவே இந்தத் துறை பற்றித் தெரிந்து வைத்துள்ளீர்கள்.ஆனால் இதெல்லாம் இப்ப கொஞ்சம் (!) குறைவு! (இப்ப என்பதை கொஞ்சம் அழுத்தமாக வாசிக்குக)அதனால் தான் நான் இதை சாதனை என்கிறேன்.

பிரபா அண்ணா, அப்படியும் ஒரு ஐடியா இருக்கோ? ;)

Madhan said...

All the best Loshan Anna

Anonymous said...

All the Best My Friend-Sri

LOSHAN said...

thanx Mathan n Sri

வந்தியத்தேவன் said...

இசை படித்தேன் இவர்கள் ஏன் இந்திய சினிமா இசை வெளியீட்டுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என அறிந்து சொல்லமுடியுமா? இதே செய்திகள் இணையத்திலும் பின்னர் தினக்குரல், வீரகேசரி மெற்றோ நியூசிலும் வருபவை இவற்றை ஒரு சஞ்சிகையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல.

ஒரு சில நம்மவர்களின் பேட்டி இருக்கின்றது அவ்வளவுதான்

கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா! வழமையா, பத்திரிகை சஞ்சிகைகளில போடுற படங்கள், இருக்கிற கொடுமைய (?) மகாகொடுமையாக் காட்டும். அப்பிடியில்லாம தெளிவா, உள்ளபடி போட்டிருக்கிற மதனுக்கும் வாழ்த்துக்களச் சொல்லிவிடுங்கோ! அதோட, “வெற்றி” அணியை ஒரே பக்கத்தில பார்த்ததில மகிழ்ச்சி (ஒன்னுகூடிட்டாங்கய்யா....)

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துகள்.
உங்கள் பணி தொடரட்டும்.

Anonymous said...

;-(

தமிழன்...(கறுப்பி...) said...

வாழ்த்துக்கள் அண்ணன்...

King... said...

வாழ்த்துக்கள் அண்ணன்
வடிவான ஆள்தான் நீங்கள்...:)

கொழுவி said...

, இருக்கிற கொடுமைய (?) மகாகொடுமையாக் காட்டும். அப்பிடியில்லாம தெளிவா, உள்ளபடி போட்டிருக்கிற //

இப்ப என்ன சொல்ல வாறீக..
மகா கொடுமையாக காட்டாமல் கொடுமையாவே காட்டுகிறது என்றா..

புரியல..

LOSHAN said...

நன்றி கார்க்கி, வந்தியத்தேவன், கிருஷ்ணா,நிர்ஷன், king, கொழுவி

வந்தி,இப்போது பல உள்ளூர் கலைஞரின் புதிய முயற்சிகள்,புதிய இசைத் தொழிநுட்பம் பற்றியும் எழுதுகிறார்கள்.

கொடுமைக்கும் மகா கொடுமைக்கும் வேறுபாடு கண்டுபிடிக்க வேற இடமே கிடைக்கலையா?

ஏன்யா இப்படி?
அடுத்த முறை என் படம் ஆனந்த விகடனிலோ,குமுதத்திலோ வந்தா என்னென்னவெல்லாம் சொல்லுவீங்களோ? ;)

பரிசல்காரன் said...

//அடுத்த முறை என் படம் ஆனந்த விகடனிலோ,குமுதத்திலோ வந்தா என்னென்னவெல்லாம் சொல்லுவீங்களோ? //

அப்போதும் இதேபோல பாராட்டுவோம் தோழா!

வாழ்த்துகள்.. விரைவில் நிறைவேற!

LOSHAN said...

நன்றி பரிசல் அண்ணே.. ஆனால் நான் என்ன நமீதாவா அல்லது கலைஞர் ,ரஜினி வகையறாவா? அடிக்கடி விகடனிலும்,குமுதத்திலும் அட்டையில் வருவதற்கு?
நீங்க தான் இப்போ ஜூ.வி இல எழுதுறீங்க தானே.. அப்பிடியே கொஞ்சம் நம்மளையும் சிபாரிசு செய்யிறது.. ;) hi hi

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified