October 21, 2008

பரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....

இன்று காலையிலேயே எனக்கு புளகாங்கிதம் (ரொம்பவே மகிழ்ச்சிங்கண்ணா) தந்த விஷயங்கள் இரண்டு..

1.பரிசல்காரன் எனக்கு பதிவு தொடரில் (தூயாவின் ஈழம் தொடர்பான தொடர் பதிவுக்கு) இணைந்து கொள்ளுமாறு விடுத்த அழைப்பு.
வந்தியத்தேவன் முதலில் என்னை ஒரு நண்பராக சினிமா தொடர்பான தொடர் பதிவுக்கு அழைத்து என்னை அங்கீகரித்தார்.இப்போது ஒரு மூத்த,பிரபல பதிவர் அங்கீகரித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.(உண்மையிலேயே நல்லா எழுதுரான்னு அழைத்தாரோ அல்லது அவரைப் பின் தொடருபவர்களில் ஒருவர் என்று அன்போடு ஊக்குவிக்க அழைத்தாரோ அவருக்கே வெளிச்சம்..)
 எனினும் அவரது பதிவிலே என் பெயர் கண்டதே ரொம்ப சந்தோஷம்..

ஆனால் நான் இன்னும் இலங்கையில் இருக்கிற தமிழன்.ஈழ உணர்வு நிறையவே இருக்கிற ஒருவன். எனது பதிவுகள் அடிக்கடி இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியே பேசுவதால் இந்தத் தொடரில் நான் இணைவது பொருத்தமாக இருக்காது என நினைக்கிறேன். நீங்கள் எனக்காக இன்னொருவரை அழைக்கவும்.

அதில் கேட்கப்பட்ட எல்லா விஷயங்களையும் நான் என் பதிவுகளில் அடிக்கடி சொல்லி வருகிறேன்.. ஈழம் பற்றி நன்றாக அனுபவப் பட்டிருக்கிறேன்.எனவே இது பற்றி ஒரு சுருக்க வரைவு பின்னர் வரைகிறேன்.. 

என்று பதில் அளித்திருக்கிறேன்.. இந்தியப் பதிவர்களின் உணர்வுகள் தான் அந்தத் தொடரில் வெளிப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்..

2. நான் பதிவுகள் போட ஆரம்பித்து இரண்டு மாதங்கள் பூர்த்தியாக முதலேயே என் தளத்துக்கு 15000க்கு மேற்பட்ட பேர் வருகை தந்திருப்பது(அல்லது வருகைகள்- page loads)..
அதிலும் குறிப்பாக நேற்று மட்டும் 900க்கு மேற்பட்ட வருகைகள்(1000 தாண்டி இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்)
இப்ப யாரும் வாசிக்காத தளமாக என் தளம் இல்லை என்பதும் நிச்சயமாகி இருக்கிறது. ;) 


இந்த வாரத்தில் என்னை மகிழ்ச்சிப்படுத்திய இன்னொரு விஷயமும் இருக்கிறது..அது பற்றி முடிந்தால் மாலை ஒரு பதிவிடுகிறேன். 

16 comments:

Athisha said...

வாழ்த்துக்கள் லோசன்..

உங்கள் பதிவுகளை தினமும் படித்த 15000 பேரில் அடியேனும் ஒருவன்..

Athisha said...

கலக்ககுங்கோ அண்ணே

புதுகை.அப்துல்லா said...

லோஷன் அண்ணே!ஆரம்பத்தில் இருந்து உங்க பதிவுகளை படித்து வருகிறேன். நேரமின்மையால் பின்னூட்டம் இடுவதில்லை. அதிகம் பின்னூட்டம் வராததால் யாருக்கும் பிடிக்க வில்லையோ என்றெல்லாம் நினைக்காதீர்கள். :))

ARV Loshan said...

நன்றி அதிஷா அண்ணே,நன்றி புதுகை அண்ணே..
வருகை,பகிர்வு,ஊக்கம் எல்லாவற்றுக்கும்..
(அதுசரி ரொம்ப சின்னப் பையனான என்னை அண்ணே னு கூப்பிடலாமா?வயசு கூடிடுமில்ல?)

பரிசல்காரன் said...

தோழா..

என்னைக் கேட்டா (உன்னை யாருடா கேட்டா..) பதிவுலகுல மூத்த, இளைய -ன்னு யாருமே இல்ல. நிறைய நாள் எழுதினா, மூத்த அல்ல. நல்லா எழுதினாதான் ஓக்கே.

உங்க ராமேஸ்வரம் பேரணி குறித்த பதிவுல உங்க கோபம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. வெடிச்சு வர்றதுதான் ரௌத்ரம். அத உங்க எழுத்துல உணர்ந்தேன். அதுக்காக உங்களுக்கு ஏதாவது பண்ணனும்ன்னுதான் கூப்ட்டேன். ஒரு ஃப்ரெண்டா, தோள்ல கைபோட்டு கூப்ட்டதா நெனைச்சுக்கங்க. மேடைல நின்னு, ‘வா தொண்டனே’ன்னு கூப்பிடற தலைவனா நெனைக்காதீங்க. ப்ளீஸ்.

Anonymous said...

லோஷன் அண்ணா, நீண்டகாலமாக உங்கள் அறிவிப்புக்கு ரசிகனாக இருந்த நான், நேற்று தான் உங்கள் ப‌திவுகளுக்குள் நுழைந்தேன். அற்புதம். நீங்கள் இன்னும் இன்னும் எழுதவேண்டும்.

ARV Loshan said...

நன்றி அபிமன்..

நன்றி பரிசல் அண்ணா..
நாங்கள் தலைவர்களையும் இங்கே அண்ணா முறை கருதியே அழைப்பதுண்டு.. ;)

எழுத்தாளன்,கலைஞன் என்றால் அந்த ரௌத்ரம் கட்டாயம் வேண்டும் தானே? அதனால் தான் அந்தக் குறிப்பிட்ட உணர்வு இருக்கும் போதே நான் எழுதிவிடுகிறேன்.பட்டதை பட்டபடி சொல்லிவிட வேண்டும்.. உங்கள் பலரின் எழுத்திலும் அதை நான் காண்கிறேன்.

Anonymous said...

படிக்கிறாங்களோ இல்லையோ ஒவ்வொரு நாளும் பதிவு போட்டால்(அப்பிடித் தானே போட்டிருக்கிறீங்க) ஒரு நாளைக்குக் குறைஞ்சது 300 பேராவது எட்டிப் பார்ப்பாங்க.. (என்னுடைய புள்ளிவிபர முடிவின்படி)

59 posts * 300 = 17700 பேர் வந்திருக்கனும்.. (சரி தானே பெருக்கினது)

மகிழ்ச்சியை குறைப்பதற்காக சொல்லேல.. சும்மா சொல்றன்.. :)
வந்தவர்களில் 8000 பேராவது படிச்சிருப்பாங்க.. சந்தோஷப்பட்டுக்கோங்க..

Nimal said...

15000 இற்கு வாழ்த்துக்கள்...

//அதுசரி ரொம்ப சின்னப் பையனான என்னை அண்ணே னு கூப்பிடலாமா?வயசு கூடிடுமில்ல?//

ஆம், லோஷன் அண்ணாவை, அண்ணா என்று கூப்பிடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்... :)

புதுகை.அப்துல்லா said...

ஆம், லோஷன் அண்ணாவை, அண்ணா என்று கூப்பிடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்... :)
//

நானும் கண்டிக்கிறேன் நிமல் அண்ணே
:)))

புதுகை.அப்துல்லா said...

LOSHAN said...
(அதுசரி ரொம்ப சின்னப் பையனான என்னை அண்ணே னு கூப்பிடலாமா?)
//


சரிண்ணே. இனிமே அண்ணேன்னு கூப்பிடலண்ணே :)))

ARV Loshan said...

சுபி, நல்ல கணக்கு.. ம்ம்ம் அநேகமாகப் பாதிப் பேராவது படித்தால் /வாசித்தால் சந்தோஷம் தான்!
(அது சரி விஜயகாந்துக்கும் உங்களுக்கும் ஏதாவது உறவு/நட்பு இருக்கா? ;))

இந்த "அண்ணே" விஷயம் பற்றி சொல்லாமலே விட்டிருக்கலாமோ?

கார்க்கிபவா said...

//
என்னைக் கேட்டா (உன்னை யாருடா கேட்டா..) பதிவுலகுல மூத்த, இளைய -ன்னு யாருமே இல்ல. நிறைய நாள் எழுதினா, மூத்த அல்ல. நல்லா எழுதினாதான் ஓக்கே.
//

இத மூலம் பதிவெழுத தொடங்கி குறைந்த மாதங்களே ஆனாலும் நல்லா எழுதுவதால் மூத்த பதிவர் என்ற தன்னை பறைசாற்றிக்கொள்ளும் பரிசலின் நுண்ணரசியலைக் கண்டிக்கிறேன்.

வாழ்த்துக்கள் லோஷன்

ARV Loshan said...

ஆகா.. இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா? நீங்க கும்மி அடிக்க(பிக் அப் பண்ணிட்டன் இல்ல?) இங்க ஒரு இடம் கிடைச்சதா? ;)

நன்றி கார்க்கி

அத்திரி said...

வாழ்த்துக்கள் லோஷன்

ARV Loshan said...

நன்றி அத்திரி !

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner