
ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் நோக்கமல்ல..எப்போது எதையாவது பற்றி எழுதத் தோன்றுகிறதோ அப்போது எழுதுவேன்; பதிவேன்.
எதைப் பற்றியும் எழுதப் போகிறேன்.இது என் தளம், என் களம்.
எங்கள் துறை (வானொலி, ஊடகம்) பற்றி இல்லாவிட்டால் என்னைப் பற்றிக்கூட உங்களில் ஒருவர் எழுதி அனுப்பி வைத்தாலும் பதிவேற்றக் கூடியளவுக்கு இருக்குமாக இருந்தால் அவற்றையும் நான் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.(அவை கடுமையான விமர்சனங்களாக இருந்தாலும் கூட)
விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளக்கூடியவனே விமர்சிக்கும் தகுதி உடையவனாகிறான்.
நான் எல்லோர் பற்றியும் எல்லாம் பற்றியும், எதைப் பற்றியும் விமர்சிக்க விரும்புகிறேன்.
4 comments:
நீங்கள் விமர்சிக்க விரும்புகிறீர்கள். விமர்சியுங்கள். அதற்காக, நாங்கள் உங்களை விமர்சிக்க வேண்டும் என்றோ நாங்கள் உங்களை விமர்சிக்கிறோம். ஆகவே நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கலாம் என்றோ நினைப்பது தவறு. உங்கள் விமர்சனங்கள் ஆக்கபூர்வமாக உள்ளதா அல்லது அநியாயமாக உள்ளதா என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கட்டும். உங்கள் தேடலின் ரசிகன் நான். வானலைகளில் பாடலினை ஒலிக்க விடும்போது, பாடல் இடம் பெற்ற படம், பாடியவர், இசை இவற்றுடன் அந்தப்பாடலை இயற்றிய கவிஞர் பெயரையும் சொல்லுங்கள். அவரிற்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் இதுதான். பாடலாசிரியரை தரம் பிரிக்கவும் இது உதவும். செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஏன் எனில் உங்களுக்கு இதை உங்கள் கடந்த கால எல்லா வானொலி நாட்களில் சொல்லியும் பணிப்புரை விடுக்கும் அளவில் இருந்தும் அதை செயற்படுத்த தவறுகிறீர்கள். நன்றிகள்.
இந்த விடயம் தொடர்பாக நான் முக்கியமாகச் சொல்லவேண்டும். நான் செய்யும் நிகழ்ச்சிகளில் ஒரு பாடல் பற்றி எனக்குத் தெரிந்த எல்லா விடயங்களையுமே நான்சொல்வதுண்டு.ஏதாவது சுவையான பின்னணிகள் இருந்தால் அவற்றைப் பற்றியும் கூறுவதுண்டு. என் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்டு வந்தால் அவை தெரியும். எனக்குத் தெரிந்ததை சொல்லப் போய் தவறுகள் விட்டு மன்னிப்புக் கேட்டுத் திருத்துவதும் உண்டு.
original cd களிலேயே இப்போதெல்லாம் பெயர்களில் பிழை விடப் படுகிறது. சில நேரங்களில் பெயர்களே இருப்பதில்லை.தேடி எடுக்கவும் முடியாத பழைய திரைப்பட விபரங்களை என்ன செய்வது? நான் செய்வதை மற்ற எல்லோரையும் செய்யச் சொல்லியும் நான் கூறியிருந்தாலும் எல்லாப் பாடல்களுக்கும் முழுமையான விபரங்கள் சொல்வது இப்போதைக்கும் சாத்தியமில்லாதது. (பதிவிறக்கம் செய்யப்பட்ட பல பாடல்களுக்கு முழுமைத் தகவல்கள் இல்லை. எல்லா அறிவிப்பாளர்களும் தேடல் நிறைந்தவர்கள் இல்லையே) ஒரே பாடல்களுக்கு ஒரே தகவல்களை எத்தனை நாளுக்கு சொல்லலாம்? உதாரணமாக ரோஜா படத்தில் மின்மினி பாடிய சின்ன சின்ன ஆசை பாடல் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
எனினும் அபூர்வமான , மற்றும் புதிய பாடல்களைப் பற்றி எப்போதுமே நாம் தகவல்கள் சொல்வதுண்டு.
நண்பர் சொன்னது போல உரியவருக்கு அங்கீகாரம் போய்ச் சேரவேண்டும் என்பதில் முழுமையான அக்கறை உள்ளவன் நான்
விமர்சனம் பற்றி நான் சொன்ன விடயங்களுக்கு நீங்கள் சொன்ன விடயங்களை நான் ஆமோதிக்கிறேன்
நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. எங்கே வழமையைப் போல் வேலைப்பளுவுக்குள் மூழ்கி விடுவீர்களோ என நினைத்தேன். நிச்சயமாக எல்லோரும் தேடல் உள்ளவர் அல்லர். ஆனாலும் இருக்கும் ஊடகம் அப்படிப்பட்டதல்லவா? தன்னை வளர்க்கவும் காப்பாற்றவும் தேடல் வேண்டும். நீங்கள் சொன்ன சின்ன சின்ன ஆசை பாடலைப் பற்றி எத்தனை முறை சொல்வது என்பது வானொலி அறிவிப்பாளனுக்கு நல்லதல்ல. தன்னை வளர்க்க முதல் அவனை மகாசனங்களுக்கு பிடிக்க வேணும்.பிடித்தபின்னர் அந்த இடத்தை காப்பாற்ற நினைக்கவேணும். அதற்கு இப்படியானவை உதவும் என எண்ணுகிறேன். நீங்கள் சொல்கிறீர்கள். மற்றவர்களுக்கும் அறிவுறுத்துங்கள். இதுல ஒரு கடினமும் இருப்பதாக நான் கருதவில்லை. லோஷன் என்றால் எனக்கு தனி மரியாதை உண்டு. உங்கள் வானொலி வாழ்வோடு நான் பயணித்தவன் ரசிகனாக. தசாவதாரம் விமர்சிக்கப்படுகிறதென்றால் கமலிடம் நிறைய எதிர்பார்த்தோம் கிடைக்கல. அதேபோலத்தான் உங்களிடமும்.....
நாம் போக்கிரி படத்திற்கு விமரிசிக்கவுமில்லை. கண்ட குரலை ரசிக்கவும் இல்லை. நன்றி.
"நான் எல்லோர் பற்றியும் எல்லாம் பற்றியும், எதைப் பற்றியும் விமர்சிக்க விரும்புகிறேன்."
எல்லாம் சரியாக தான் இருக்கிறது ஆனால் "எல்லோர் பற்றியும் எல்லாம் பற்றியும், எதைப் பற்றியும்" என்பது தான் கொஞ்சம் இடிக்கிறது அண்ணா. கொஞ்சம் உங்கள் குடும்பத்தின் நிலைமைகளை யோசிக்கவும்.
this s 4 Sri Lankan people.
I think they don't have freedom anna so v must think our condition.
Your fan 4ever.Nobody can control.
Do the best but think b4 writing.
Post a Comment